districts

img

உலக யூசிஎம்ஏஎஸ் போட்டி தாமரை சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

மயிலாடுதுறை,  டிச.27 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் இயங்கி வரும் தாமரை சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் புதுதில்லியில் டிச.14 முதல் 17 வரை நடைபெற்ற யூசிஎம்ஏஎஸ் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளனர். புதுதில்லியில் டிச.14 முதல் 17 வரை நடைபெற்ற உலக யூசிஎம்ஏஎஸ் போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 6 ஆயிரம் மாணவர்கள் போட்டியிட்டனர். ‘ஏ’ பிரிவில் தாமரை பள்ளியின் மாணவர் கே.ஆர்.செல்வராம் 3 ஆவது இடத்தையும், ‘பி’ பிரிவில் அதே பள்ளியில் பயிலும் கே.ஆர்.கலைராம் 3 ஆவது இடத்தையும் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.  வெற்றி பெற்று பள்ளிக்கு திரும்பிய இரு மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த மோகனச்செல்வி  ஆகியோரை, கலைமகள் கல்வி குழும இயக்குநர் என்.எஸ்.குடியரசு மற்றும் நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உற்சாக வரவேற்பளித்து, பாராட்டி பரிசுகளை வழங்கினர்.