districts

img

ஊதிய மாற்ற நிலுவைத் தொகை கோரி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊதிய மாற்ற நிலுவைத் தொகை கோரி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்  கரூர், டிச.27 - புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர், குளித்தலை, தோகை மலை, கடவூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, க.பர மத்தி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில  துணைத் தலைவர் எம்.செல்வராணி, மாவட்டச் செய லாளர் பொன் ஜெயராம், மாவட்டத் தலைவர் எம்.எஸ். அன்பழகன், மாவட்ட பொருளாளர் எல்.பாலசுப்பிர மணியன், மாவட்ட தணிக்கையாளர் கே.செல்லமுத்து, மாவட்ட துணை தலைவர் பிரேம்குமார் ஆகியோர் கண்டன  உரையாற்றினர்.