பெரம்பலூர், நவ.25- தமிழ்மொழியை மத்தியில் ஆட்சி மொழியாக அறி விக்கவேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்பு ஆட்சி மன்றக் கூட்டம் வலியுறுத்தப்பட்டது. உலகத் திருக்குறள் கூட்டமைப்பு ஆட்சி மன்றக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை பெரம்பலூரில் கூட்டமை ப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் நடை பெற்றது. துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.வி.சாந்தி வரவேற்புரை ஆற்றினார். பொதுச்செய லாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் கூட்ட நோக்க வுரை நிகழ்த்தினார். அறக்கட்டளைத் தலைவர் தா. சம்பத், அறக்கட்டளை நிர்வாக அறிக்கை வாசித்தார். கூட்ட மைப்பு பொருளாளர் பெ. சௌந்தர்ராஜன் கூட்டமைப்பு நிதிநிலை அறிக்கை வாசித்துப் பேசினார். அமைப்புச் செயலாளர் ப. காசிநாதன் அமைப்பு விதிகள் குறித்து விளக்கினார். நிகழ்வில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மத்திய அரசு தமிழ்மொழியை மத்தி யில் ஆட்சி மொழியாக அறிவிக்கவேண்டும், யுனஸ்கோ அமைப்பு திருக்குறளை உலக நூலாக அறிவிக்க வேண்டும், மண்டல் கமிஷன் அறிக்கையை மத்திய அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசு, மாநில அரசுக்கு ஒதுக்கும் நிதியின் அளவை 50% ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.