districts

திருச்சி முக்கிய செய்திகள்

காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை  எடுக்க பொதுமக்கள் கோரிக்கை 

அறந்தாங்கி, நவ.25-  அறந்தாங்கி அரசு மருத்துவமணையில் 37 பேர் காய்சல், ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகர பகுதியில் காய்ச்ச லை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி நகர் பகுதி யில் கடந்த சில நாட்களாக பெய்த மழை தண்ணீர் தாழ்வான பகுதியில் தேங்கி கிடக்கிறது. இதில், கொசு உற்பத்தி ஆகி தற்போது நகர் பகுதியில் அதிக அளவில் உலாவருகிறது. கொசுக்களை அழிக்க கொசுமருந்து, புகை மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. 3 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமணையில் தற்போது 37 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவ ருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  அறந்தாங்கி நகர் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களை கட்டுப்படுத்த மேலும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம் அருகே நியாய விலைக் கடை  கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர், நவ.25 -  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபா வாசத்திரம் ஒன்றியம், மருங்கப் பள்ளம் ஊராட்சி, சாந்தாம்பேட்டை யில் புதிய அங்காடிக் கட்டிடம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டிலும், அழகிய நாயகிபுரம் ஊராட்சி கரிசவயல் பகு தியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பொது விநியோகக்கட்டிடம் ரூபாய் 13.45 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப் பட உள்ளது.  இதற்கான பணிகளை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி. முத்துமாணிக்கம் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பி னர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மணிமேகலை, கம்பர் தலைமை பொதுக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பி னர், ஊராட்சி மன்றத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

திண்டுக்கல், நவ.25- திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வர் ராஜசேகர். இவர் ரெட்டியார்சத்திரம் பகுதியில் திருட்டு,  செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடு பட்டு வந்தார். இதனையொட்டி ரெட்டியார்சத்திரம் காவல்  நிலையத்தில் இவர் மீது பல வழக்குகள் இருந்து வரு கிறது.  பல நாட்களாக தேடப்பட்டு வந்த கொள்ளையன் ராஜ சேகரனை போலீசார் கைது செய்தனர். போலீசார் விரட்டிச்  சென்ற போது கீழே விழுந்து ராஜசேகருக்கு கைமுறிவு  ஏற்பட்டது.

நத்தம் பேரூராட்சி கூட்டம்:  10 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நத்தம், நவ.25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி மன்ற அலு வலக வளாகத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட சிறப்பு  கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் விஜயநாத், துணைத்  தலைவர் மகேஸ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நத்தம் பேரூராட்சிக்கு உட்பட்ட எல்.பள்ளப்  பட்டியில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்  பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்  வாளர் சித்ரா மேரி உள்ளிட்ட கவுன்சிலர்கள், பேரூராட்சி  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேனியில் குறைதீர் கூட்டத்தில் 290 கோரிக்கை மனு

தேனி, நவ.25- தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலு வலகத்தில் திங்களன்று (25.11.2024) நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்  தில் 290 கோரிக்கை மனுக்களை மாவட்ட  ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 290 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்  பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி  மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் குடும்பநல உதவித் திட்டத்தின் கீழ் தலா ரூ.20,000 வீதம் 10 பயனாளிகளுக்கு காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, விளையாட்டுத் துறை சார்பில் நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு விடுதி களுக்கு இடையேயான கால்பந்து போட்டி யில் தேனி மாவட்ட விளையாட்டு விடுதி  அணியினர் வெற்றி பெற்றதை முன்னிட்டு,  மாவட்ட ஆட்சித்தலைவரை விளையாட்டு வீரர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற னர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.)  சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரி செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலர் காமாட்சி, மாவட்ட விளையாட்டு  அலுவலர் முருகன் மற்றும் அரசு அலுவ லர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செம்பட்டி அருகே தொடர் விபத்து லாரி மோதி மூவர் பலி

சின்னாளப்பட்டி, நவ.25- திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வத்தலக்குண்டு சாலை புல்வெட்டி  குளத்தில், திண்டுக்கல்லில் இருந்து வத்த லக்குண்டு நோக்கிச் சென்ற, தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றும் திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த காதர்  அலி (38), இதே நிறுவனத்தில் பணியாற்றும்  திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த  நாகராஜ் (28) ஆகியோர் வத்தலக்குண்டு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களுக்கு பின்னால் செம்பட்டி அருகே வீரசிக்கம்பட்டியைச் சேர்ந்த விவ சாயி சடமாயன் (50), இவரது மனைவி ரதி  (48) ஆகிய இருவரும் இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது, வத்தலக்குண்டில் இருந்து  காய்கறிகளை ஏற்றிக் கொண்டு செம்பட்டி வழியாக திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி  இருசக்கர வாகனங்களின் மீது பயங்கர மாக மோதியது. இதில் நாகராஜ் மற்றும்  காதர் அலி சம்பவ இடத்தில் பலியாகினர். படுகாயமடைந்த சடமாயன், அவரது மனைவி ரதி ஆகிய இருவரும் திண்டுக்கல்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பல னின்றி விவசாயி சடமாயன் பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  செம்பட்டி போலீசார், விபத்தில் பலியான வர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்  துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த வாரம் இதே இடத்தில் லிப்ட்  கேட்டு வந்த இரண்டு பாலிடெக்னிக் மாண வர்கள், வனத்துறை வனக்காப்பாளர் என மூன்று பேர், லாரி மோதி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.