பாபநாசம், நவ.25- பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி களில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இதனால், நாய்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள், சாலைக ளில் செல்லும் இரு சக்கர வாகனங்கள், கார்களில் செல்பவர்களை குரை த்தப் படி துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டி கள் விபத்துகளில் சிக்கு கின்றனர். பிரதான சாலை களில் நாய்கள் ஒன்றோ டொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால், சாலைகளில் நடந்துச் செல்பவர்கள் அச்சத்திற்கு ஆளா கின்றனர். குழந்தைகளால் தெருக்களில் விளையாட முடியவில்லை. தனியாகச் செல்லும் குழந்தைகளை நாய்கள் துரத்துகின்றன. பழக்கமான தெருக்களில் கூட இரவு பணி முடித்து வீடு திரும்புபவர்களால், இரவு வீடு செல்ல முடிய வில்லை. இரவு நேரங்களில் சுற்று வட்டார கிராமப் புறங்களில் சைக்கிளிலோ, நடந்தோ செல்ல முடியாத நிலை உள்ளது. பிரதான சாலைகளில் கூட்டம் கூட்ட மாக நாய்கள் திரிகின்றன. ஆடு, கோழிகளை கடிக்கத் துரத்துகின்றன. தோல் நோயுடன் பல நாய்கள் சுற்றித் திரிகின்றன. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பாபநாசம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.