திருச்சிராப்பள்ளி, ஜூன் 8 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தமிழகத்தின் 7 முனைகளிலிருந்து பிரச்சார நடைப்பயணம் கடந்த ஜூன் 4 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சார நடைப்பயணக் குழுக்கள் ஜூன் 10 ஆம் தேதி திருச்சியில் சங்கமிக்கின்றன. மயிலாடுதுறையில் இருந்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பொதுச் செயலா ளர் மலர்விழி, மாநிலச் செயலாளர் லதா ஆகி யோர் தலைமையில் துவங்கிய பிரச்சார நடைப் பயணம் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சா வூர் வழியாக புதனன்று திருச்சியை வந்த டைந்தது. திருச்சி வந்த பிரச்சார நடைப்பயணக் குழு வினருக்கு துவரங்குறிச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் சத்தியவாணி, மாவட்ட செயலாளர் அல்போன்சா தலைமையில் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது. கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் கிரேஸிலில்லி, மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட துணைத்தலைவர் சேட்டுமுகமது ஆகியோர் பேசினர். மணப்பாறையில் சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜன், வட்டத்தலைவர் வெங்கடேசன், ஓய்வு பெற்றோர் சங்க வட்டத்தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் பேசினர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பெரியசாமி தலை மையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட் டது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் பேசினர்.