முசிறி, ஜன.7 - முசிறி ஊராட்சி ஒன்றியம் திருத்தியமலை ஊராட்சி மணலி அயித்தாம்பட்டியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்விகுமார் தலைமையில், கவுன்சி லர்கள் முன்னிலை வகித்தனர். இதில், 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், செயற்கை முறையில் ஆண்மை நீக்கம், மலடு நீக்கம், சினைப்பை சோதனை, தாது உப்பு வழங்குதல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக கால்நடை மருத்துவ குழு, சிறந்த கிடாரிகள் பேரணி நடத்தி, சிறந்த கிடாரி கன்றுக்கு பரிசு வழங்கினர். கால்நடை பராமரிப்பு மேலாண்மைக்கான சிறந்த விவசாயி தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.