திருவாரூர், அக்.30 - திருவாரூரில் விஷவாயு தாக்கி பலியான 2 தொழிலாளர்களுக்கு சட்டப்படியான நிவாரணமும், நீதி யும் வழங்கப்பட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது. திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட கழிவுநீர் உந்து நிலையத்தில் கழிவு நீரை வெளியேற்றுகிற போது நக ராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் கழிவுநீர் வாகன ஓட்டுநர் மணிமாறன் (30) மற்றும் ஒப்பந்தத் தொழிலாளி அருணாச்சலம் (27) ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி கடந்த அக்.27 ஆம் தேதி மரண மடைந்தனர். இதனையடுத்து திருவாரூர் நக ராட்சி அலுவலகம் முன்பு அக்.28 அன்று சிஐடியு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திருவாரூர் நக ராட்சி துப்புரவு மற்றும் தூய்மை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தி னருக்கு உரிய நீதி வழங்கிட வேண்டி போராட்டம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், உடனடியாக ரூ.5 லட்சம் காசோலையாக பாதிக்கப் பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டு மேற்கண்ட உரிய நடவடிக்கை எடுப்ப தாக நகராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது. இதையொட்டி போராட் டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் மரணமடைந்த இரு தொழிலாளர்கள் குடும்பத்தி னருக்கு உரிய நிவாரணம் வழங்கிட கோரி, புதன்கிழமை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. அதில், “திருவாரூர் நகராட்சி நிர்வாகம் தொழிலாளர்கள் மரணத் திற்கு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமான வர்கள் மீது வழக்குப் பதிவு செய்திட வேண்டும்” என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு சார்பாக அமைப் பின் செயலாளர் கே.தமிழ்மணி, தலைவர் ஜி.பழனிவேல், மாவட்ட நிர்வாகிகள் பி.கந்தசாமி, கே.கோபிராஜ் ஆகியோர் தலைமை யில் மனு அளிக்கப்பட்டது. ஆணையர், ஆட்சியர் நேரில் ஆய்வு மேலும் புதன்கிழமை தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையர் எம்.வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன் ஆகியோர் கழிவுநீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி, இளைஞர்கள் இருவர் இறந்து போன இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் இரு வீட்டு குடும்ப உறுப்பினர்களை அழைத்து ஆறுதல் கூறி, ஆய்வறிக்கை வந்த பின்பு உரிய இழப்பீடு கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். ஆய்வில் நகராட்சி தலைவர் புவனப்பிரியா செந்தில் மற்றும் நக ராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.