tamilnadu

img

சென்னை கால்பந்துத் திடல்கள் தனியார்மயத் தீர்மானம் ரத்து!

சென்னை, அக். 30 - சென்னையிலுள்ள கால்பந்து மைதானங்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை ரத்து செய்வதாக சென்னை மாநகராட்சி புதன்கிழமை அறிவித்துள்ளது.  சென்னையில் பூங்காக்களுடன் இணைந்தும், தனியாகவும், விளை யாட்டு மைதானங்கள் உள்ள நிலை யில், அவற்றில் டென்னிஸ் திடல்,  ஷெட்டில் பேட்மிண்டன் திடல்களை, மாநகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே  தனியாருக்கு கொடுத்து விட்டது. இதன் தொடர்ச்சியாக, செவ்வாயன்று (அக்.29) நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், 9 செயற்கைப் புல் கால் பந்து விளையாட்டு மைதானங் களுக்கும் கட்டணம் நிர்ணயித்து, தனியார் வாயிலாக பராமரிக்க தீர்மானம் கொண்டு வந்தது. இதன்மூலம் மக்கள் இலவசமாக பயன்படுத்தி வந்த மைதானங்களுக்கு இனி நபர் ஒருவர் மணிக்கு 120 ரூபாய் செலுத்த வேண்டும். இரண்டு அணிகள் (5+5) ஒரு மணி நேரம் விளையாடினால் 1200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கு மாமன்றக் கூட்டத்திலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் பா. விமலா, எம். சரஸ்வதி, ஆ. பிரிய தர்ஷினி, சிபிஐ உறுப்பினர் ரேணுகா  ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். அவர்கள் மாநகராட்சி மாளிகை வளாகத்திலேயே கால்பந்து விளை யாடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குறிப்பாக கவுன்சிலர் விமலா பேசும் போது, “இந்த அரசு விளையாட்டை வெறும் பொழுது போக்காக பார்க்க வில்லை. அது மனம், உடல் வலிமை சார்ந்ததாக பார்க்கிறது” என்று முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் சில நாட் களுக்கு முன்பு, நேரு விளையாட்டு அரங்கில் பேசியதைச் சுட்டிக்காட்டி னார்.

இந்த புரிதல் சென்னை மாநக ராட்சிக்கும் வேண்டும். விளை யாட்டுக்கு செலவிடுவதை செலவின மாக அல்லாமல் நாளைய தலை முறைக்கு செய்யும் முதலீடாக பார்க்க வேண்டும். எனவே, தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும்” என்றார். ஆனால், “கோடிக்கணக்கில் செல விட்டு மைதானங்களை அமைக்கி றோம். அவற்றைச் சிலர் தவறாக பயன் படுத்துவதை தடுக்கவே கட்டணம்... அதுவும் குறைவாகத் தான் நிர்ண யித்துள்ளோம்” என்று கூறியதுடன், 79 தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறி வித்தார். இதனைக் கண்டித்து, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் மற்றும் கால்பந்து பயிற்சி பெறுவோர் இணைந்து, சைதாப் பேட்டை அம்மா பூங்கா மைதானம் வாயிலில் உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக். 30 அன்று பெரிய மேடு நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள அம்பேத்கர் திடல் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, சிபிஎம் கவுன்சிலர் பிரியதர்ஷினி உள்ளிட் டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த எதிர்ப்புகளை தொடர்ந்து, 9 கால்பந்து செயற்கை புல்விளை யாட்டுத் திடல்களை கட்டணம் ஏது மின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனு மதிக்க பெருநகர மாநகராட்சி தீர்மானித் துள்ளது. இந்த விளையாட்டுத் திடல்கள் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும் என்று மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார்.

வாலிபர் சங்கம் வரவேற்பு

இதையடுத்து, விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு வழங்கி, அவர்கள் மூலம் விளையாட்டு வீரர்களி டம் கட்டணம் (user charge) வசூ லிக்கும் முடிவினை கடும் எதிர்ப்பால்  சென்னை மாநகராட்சி கைவிட்டிருப்பது வரவேற்பிற்குரியது. எளிய பின்புலம் கொண்ட இளைஞர்களுக்கு ஒரே வாய்ப் பாக இருக்கும் பொது மைதானங்களை மேற்கொள்வது இக்காலத்திற்கு மிக வும் பொருத்தமானது” என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், மாநிலச் செய லாளர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.