ஹிஸ்புல்லா புதிய தலைவர் நைம் காசிம்!
பெய்ரூட், அக். 30 - ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவ ராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி லெபனானின் தாஹி யில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தை குறி வைத்து இஸ்ரேல் ஏவு கணை தாக்குதல் நடத்தி யது. இதில் ஹிஸ்புல்லாவின் தலைமையகம் இடிந்து தரை மட்டமானதுடன், அங்கி ருந்த ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா வும் கொல்லப்பட்டார். அதன்பிறகு ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹாசெம் சாபிதீன் தேர்வு செய்யப்பட இருந்தார். ஆனால் அவரை யும் இஸ்ரேல் கொலை செய்தது. இந்தப் பின்னணி யிலேயே, ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டு ள்ளார். “ஹிஸ்புல்லாவின் வழக்கமான நடைமுறைப் படி ஷூரா கவுன்சில் கூடி நைம் காசிமை பொதுச்செய லாளராக தேர்வு செய்துள் ளோம்’’ என ஹிஸ்புல்லா அமைப்பு அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, அக்.30- சென்னை விமான நிலைய இயக்குநனர் அலு வலகத்திற்கு, செவ்வா யன்று இ-மெயிலில் வெடி குண்டு மிரட்டல் வந்தது. இலங்கை, மும்பை, பெங்களூரு, தில்லி, கொல் கட்டா ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரும் 8 ஏர் இந்தியா விமானங்களி லும், கோவா, புனே, ஹைதராபாத் ஆகிய இடங் களில் இருந்து சென்னை வரும் 3 இண்டிகோ ஏர் லைன்ஸ் விமானங்களி லும் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினர் அங்கு தீவிர சோதனை மேற்கொண்ட னர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்து றையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தீபாவளி: பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்
சென்னை, அக்.30- தீபாவளி பண்டிகை யைத் தொடர்ந்து, அதற் கடுத்த நாளான வெள்ளிக் கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால் சனி, ஞாயிற்றுக்கிழ மைகள் சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளதால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பய ணம் மேற்கொண்டனர். இந்நிலையில், பேருந்து கள், ரயில்களில் வழக்கத் தைவிட கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. இதனால், கூட்ட நெரிசலை சமாளிக்க தமிழகம் முழு வதும் பேருந்து நிலையங் கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகளில் 48 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ள தாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை – திண்டுக்கல் இடையே நவம்பர் 6 வரை சிறப்பு ரயில்
கோவை, அக்.30- தீபாவளியையொட்டி, கோவை – திண்டுக்கல் இடையே இரு மார்க்கமாக வும் புதன்கிழமை முதல் நவம்பர் 6 வரை, தினசரி மெமு சிறப்பு ரயில் இயக்கப்படு கிறது. கோவையில் இருந்து தினசரி காலை 9.35 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும். அங்கிருந்து மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 5.50 மணிக்கு கோவை வந்தடையும். இந்த மெமு சிறப்பு ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிறுத்தங் களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் கண்டனம் எதிரொலி இரவில் விசாரணை செய்யக் கூடாது அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை உத்தரவு
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 64 வயது தொழில திபர் ஒருவரிடம் இரவு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை கண்டித்தும், அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும் தொழிலதிபர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம்,”தூக்கம் என்பது அடிப்படை உரிமை. ஆனால் மனுதாரரிடம் தூக்க நேரத்தில் கூட இடைவிடாது விசாரணை செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. தேவைப்பட்டால் அதற்கு அடுத்தநாள் மீண்டும் வரவழைத்து விசாரணை நடத்தலாம். மிக முக்கியமாக சம்மன் அனுப்பி விசாரிப்பதற்கு முன் குறிப் பிட்ட நாளில் தேவையான ஆவணங்க ளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மணிக்கணக்கில் காக்க வைக்கக் கூடாது. சம்மனுக்கு பிந்தைய விசாரணை நடைமுறைகளுக்கு முறையான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். அதே போல சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக் கில் சம்மனை ஏற்று ஆஜராகும் நபர்க ளின் வாக்கு மூலத்தை பகலில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்” என அமலாக்கத்துறைக்கு உத்தர விட்டிருந்தது. இதனையடுத்து,”விசாரணைக்கு ஆஜராகும் நபர்களை மணிக்கணக்கில் காக்க வைக்கக் கூடாது என்றும், பகலில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும்” என அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, அக்.30- தமிழகத்தில் வியாழனன்று (அக்.,31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல், தென்மேற்கு அரபிக் கடலின் மேல் என, இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் தீபாவளி நாளான வியாழனன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் பயணம்
சென்னை, அக்.30- சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. வெளியூரைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அரசு ஏற்பாடு செய்திருந்த வழக்கமான மற்றும் சிறப்பு பேருந்துகளில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். தீபாவளியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மட்டும் 4,059 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. வழக்கமாக இயங்கும் 2,092 பேருந்துகளுடன், 1967 சிறப்புப் பேருந்துகளும் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டுள்ளன. இது தவிர, விமானங்கள், ரயில்களிலும் ஏராளமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் : அமைச்சர்
சென்னை,அக்.30- திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். பொது தரிசன வரிசையில் இந்தாண்டு க்யூ லயன் காம்ப்ளக்ஸ் அமைக்கப்பட்டு அதில் இருக்கை வசதி, மின்விசிறி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சுழற்சி முறை யில் கோயில் கடல் பாதுகாப்பு பணியாளர்களுடன் மீன்வளத்துறை பணியாளர்கள் இணைந்து பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்து களை இயக்கிடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை,அக்.30- குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார் விருது” ஒவ் வொரு ஆண்டும், தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடி மக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீய ணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதி யாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவர் ஆவர்.
காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளால் தமிழ் மொழிக்கான நேர்முகத் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும்?
சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, அக்.30- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக கடந்த 2014 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான வித்யாசாகர் என்பவர் தமிழ் மொழித் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழை வரும் நவம்பருக்குள் சமர்ப்பிக்காவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என ஏற்கெனவே அவருக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த வித்யாசாகர், ஆங்கில வழியில் பட்டப்படிப்பை முடித்த நிலையில் தமிழ் மொழிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்றதாகவும், ஆனால் நேர்முகத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதால், தமிழ் மொழித் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தன்னை நிர்பந்திக்கக்கூடாது என்றும், இதற்காக தனது ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை திங்களன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கல்வி, வேலை வாய்ப்பு முதல் பொது சேவைகள், சுகாதாரம் வரை மாற்றுத் திறனாளிகளால் முழு பங்களிப்பையும் வழங்க முடியவில்லை. அவர்கள் சமூக, கலாச்சார, சுற்றுச்சூழல் ரீதியாக எதிர்கொள்ளும் தடைகளை புரிந்து கொண்டு, அவற்றை அகற்ற வேண்டும். சாதாரண நபர்களுக்கு விதிக்கும் நிபந்தனைகளை, மாற்றுத் திறனாளிகளுக்கும் விதித்து தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாய் பேச முடியாத மனுதாரரால் எப்படி தமிழ் மொழி தேர்வுக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள முடியும்? எனவே, தமிழ் மொழித் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து மனுதாரருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விலக்கு அளிக்க வேண்டும். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளையும் தமிழக அரசு அவருக்கு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
சிஐடியு கடல் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி
இராமநாதபுரம், அக்.30- தேசிய கடல் மீனவர் சேமிப்பு நிவாரண நிதி மற்றும் மீன்பிடி குறைவு கால நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு கடல் தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதனன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் காரணமாக இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை யில் முதல் கட்டமாக மீன்பிடி குறைவு கால நிவாரண நிதி ரூ.6,000 உடனடியாக வழங்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில், தேசிய கடல் மீனவர் சேமிப்பு நிவாரண நிதி ரூ.4,500-ல் மீன வர்கள் கூட்டுறவு சங்கம் மூலமாக செலுத்திய பங்கு தொகை ரூ.1,500 மட்டும் செவ்வா யன்றே தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மீன வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு தர வேண்டிய மீத தொகையான ரூ.3000 பின்பு வழங்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு இராம நாதபுரம் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) எதிர்ப்பு தெரிவித்து போராட்ட நடவ டிக்கைகளில் ஈடுபடும் என மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கூறியதை தொடர்ந்து, அந்த தொகை இன்று வரை இராமநாத புரம் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட வில்லை. எனவே இந்த வார இறுதிக்குள் சேமிப்பு நிவாரண நிதி ரூ.4,500 வழங்கவில்லை என்றால், நவம்பர் 4 (திங்களன்று) இராம நாதபுரம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், காதில் பூ சுற்றி கொண்டு - திருவோடு ஏந்தி நூதன முறை யில் மனு கொடுக்கப்படும் என கடல் தொழி லாளர் சங்கம் கூறியுள்ளது.
புதுச்சேரியில் சிறுபான்மையினர் மக்கள் நலக்குழு அமைப்பு கூட்டம்
புதுச்சேரி, அக்.30- சிறுபான்மையினர் மக்கள் நலக் குழுவின் அமைப்புக் கூட்டம் கிறிஸ்டோபர் தலைமையில் புதுச்சேரி முதலியார் பேட்டையில் நடைபெற்றது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி துணைத் தலை வர் சத்தியா கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாநிலத் தலை வர் பிரபுராஜ் நோக்கங்கள் குறித்து பேசினார். புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்பு களால் சிறுபான்மை யினருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்தும், மக்கள் ஒற்றுமை பாது காக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவா திக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு
இந்த கூட்டத்தில் சத்தியா, கிறிஸ்டோபர், ரியாஸ்கான், அமானுல்லா ஆகிய 4 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது.நேரு, சேவியர், அஷ்ரஃப்,முகமது முஸ்தபா ஆகி யோர் இணை ஒருங்கிணைப்பா ளர்களா கவும் ஸ்டாலின் (முத்தி யால்பேட்டை), ஆரோக்கிய மேரி (உருளை யன்பேட்டை), ஜான் பீட்டர் ( சா.பி.தோட்டம்), அருள் மேரி (அரியாங்குப்பம்), இக்பால் பாஷா (பெரியார் நகர்) ஆகியோர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.