மயிலாடுதுறை, அக்.30 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தின் தூண்டில் வளைவு பகுதியில் சுற்றுச்சூழல் சமூக விழிப்புணர்வு தூய்மைப்பணி முகாம் நடைபெற்றது. தரங்கம்பாடியில் உள்ள டி.இ.எல்.சி சீகன்பால்கு ஆன்மீக மன்றம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஐக்கிய இறையியல் கல்லூரியும் இணைந்து, தரங்கம்பாடி துறைமுகப் பகுதி தூண்டில் வளைவில் கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் பொருட் களை அகற்றி தூய்மைப் பணி மேற் கொண்டனர். சீகன்பால்கு ஆன்மீக மன்ற இயக்குந ரும், ஆயருமான சாம்சன் மோசஸ் தலைமை யில் நடைபெற்ற இம்முகாமில் அக்கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி மேற்கொண்ட னர். பெங்களூரு ஐக்கிய இறையியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஸ்ருதி ஜோசப், தரங்கம்பாடி பேரூராட்சியின் துணைத் தலைவரும், சமூக ஆர்வலரு மான பொன். ராஜேந்திரன் ஆகியோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி யவர்களை வாழ்த்தினர்.