காவல் ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு பிடி ஆணை
தஞ்சாவூர், டிச.8- தஞ்சாவூரிலுள்ள மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகாத காவல் ஆய்வாளர், 3 காவலர்களுக்கு புதன்கிழமை பிடி ஆணை பிறப் பிக்கப்பட்டது. தஞ்சாவூர் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரோதயம் மகன் இளவரசன் (40). கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வீட்டில் இருந்த இவரை தெற்கு காவல் நிலையத்திலிருந்து அப்போதைய சார்பு ஆய்வாளர் கழனியப்பன் (தற்போது திருத்துறைப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர்), காவலர்கள் கணேசன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி ஆகியோர் எவ்வித காரண மும் கூறாமல், அடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், காவல் நிலையத்தில் ஆடைகளைக் களைந்து, உள்ளாடையுடன் உட்கார வைத்து தாக்கிய தாகவும் மனித உரிமை ஆணையத்தில் சந்திரோதயம் புகார் செய்தார். இதையடுத்து, கழனியப்பன், கணேசன், அண்ணா துரை, சத்தியமூர்த்தி ஆகியோர் மீது தஞ்சாவூர் மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக புதனன்று விசாரணை நடைபெற்ற போது, கழனியப்பன், கணேசன், அண்ணாதுரை, சத்திய மூர்த்தி ஆகியோர் ஆஜராகவில்லை. எனவே, இவர் களுக்கு நீதிபதி பி. மதுசூதனன் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
பேராவூரணி பகுதியில் ரூ.500 கள்ளநோட்டுகள் புழக்கம்
பேராவூரணி, டிச.8- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சுற்றி நூற்றுக்க ணக்கான கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது அன்றாட, அத்தியா வசிய தேவைகளுக்கு பொருட்கள் வாங்க பேராவூர ணிக்கு வரவேண்டும் என்பதால் காய்கறி, மளிகை, பழம், நகை, ஜவுளி உள்ளிட்ட கடைகளில் கூட்டம் அதிக மாக இருக்கும். இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடு கின்றனர். அசல் நோட்டில் GUARANTEED BY THE CENTRAL GOVERNMENT என சிறிய எழுத்து உள்ளது. கள்ள நோட்டில் GUARANTEED BY THE SHOOTING PURPOSE என உள்ளது. எனவே, வியாபாரிகள் கையில் பணத்தை வாங்கும் போது சந்தேகம் ஏற்பட்டால் இந்த எழுத்தை உற்றுப் பார்த்து கண்டுபிடித்து விடலாம். வியாபாரம் அதிகமாக உள்ள கடைகளில் தினசரி ஒருசில கள்ள நோட்டுகள் வந்து விடுவதாகவும், இரவு கணக்குப் பார்த்து பணம் எண்ணும் போது கண்டுபிடித்து வேறுவழியின்றி கிழித்து எறிந்து விடுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே, கள்ள நோட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய சுவரொட்டி அச்சடித்தவர் கைது
கும்பகோணம், டிச.8- கும்பகோணத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கர் படம் அச்சிட்ட அச்சக உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, கும்ப கோணம் மாநகரில் சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கர் படம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் 5-ஆம் தேதி இரவு ஒட்டப்பட்டன. அந்த சுவரொட்டியில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மாநிலச் செயலாளர் குரு மூர்த்தி படங்களும் இடம்பெற்றிருந்தன. இதற்கு விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, காவல் துறையினர் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடு பட்டனர். மேலும் கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் அச்ச டித்து வெளியிட்ட குருமூர்த்தியை கைது செய்ய வலி யுறுத்தி டிஎஸ்பி அலுவலக முன்பு முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் டி.குருமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய சுவரொட்டி யை அச்சடித்த உப்புக்கார தெருவில் உள்ள அச்ச கத்தின் உரிமையாளர் மணிகண்டனை (35) கிழக்கு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் ஊர்க்காவல் படையில் திருநங்கை உள்பட 36 பேர் தேர்வு
தஞ்சாவூர், டிச.8- தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலி யாக உள்ள 36 பணியிடங்களுக்கு அக்டோபர் மாதம் உடற்தகுதித் தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடை பெற்றன. இதில், தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கை சிவன்யா) என மொத்தம் 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவ ளிப்ரியா கந்தபுனேனி பணி நியமன ஆணைகளை புத னன்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி செந்தில்குமார், மண்டல தளபதி சுரேஷ், துணை மண்டல தளபதி மங்களேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் திரு நங்கை ஒருவர் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.