districts

திருச்சி விரைவு செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

புதுக்கோட்டை, மார்ச் 20-  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த  கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் மணி (43). இவர் கடந்த 2021 மார்ச் 13-ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 14 வயது சிறுமியை பாலியல்  தொந்தரவு செய்துள்ளார்.  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகா ரின்பேரில் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்  பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல்துறை யினர், மணியைக் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை யின் நிறைவில், மணிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து நீதி பதி ஆர்.சத்யா திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். அபராதத்  தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


மண்டல அளவிலான தடகளப் போட்டி ஏழுமலையான் கல்லூரி மாணவர்கள் வெற்றி

திருவாரூர், மார்ச் 20-  நாகை - புதுச்சேரி மண்டல அளவிலான ஆடவர் தடகள  விளையாட்டு போட்டிகள் கடலூர் ஸ்ரீமகாலட்சுமி பாலி டெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நன்னிலம் வட்டம், கொல்லுமாங்குடி உள்ள ஏழு மலையான் பாலிடெக்னிக் மாணவர்கள் குண்டு எறிதலில்  முதலிடமும், சங்கிலி குண்டு எறிதலில் முதல் மற்றும்  இரண்டாமிடமும், கோல் ஊன்றி தாண்டுதல், மும்முறைத் தாண்டுதலில் இரண்டாம் இடமும், 5000 மீட்டர் ஓட்டம், 10000 மீட்டர் ஓட்டம், வட்டு எறிதலில் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை சேர்மன் ரவி, துணை  சேர்மன் ராக்கவ் தினேஷ், தாளாளர் தேவகி, இயக்கு நர்கள் காவ்யபிரியா, மதுமதி, முதல்வர் பூபதி, மேலாளர் துரை.சரவணன், துணை முதல்வர் சுமதி ஆகியோர் பாராட்டினர்.


வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

கும்பகோணம், மார்ச் 20- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள  கோவில் ராமாபுரம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர்  தனபால். இவரது மனைவி பவுனம்மாள் (65). கூலி தொழி லாளி. இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில்  மாற்றுத்திறனாளியான மூளை வளர்ச்சி குன்றிய மகனை வைத்து வாழ்ந்து வந்தார்.  இவர் தனது வீட்டின் பின்பக்கம் இயற்கை உபாதை  கழிக்க வந்தபோது அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்  தது. இதில் சம்பவ இடத்திலேயே பவுனம்மாள் இறந்து  விட்டார். இதுகுறத்து அறிந்த பந்தநல்லூர் காவல் துறை யினர் பவுனம்மாள் உடலை மீட்டு கும்பகோணம் அரசு  மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இறந்த மூதாட்டி பவுனம்மாவின் பராமரிப்பில் இருந்து  வந்த மாற்றுத்திறனாளியான மனவளர்ச்சி குன்றிய மகன்  தற்போது ஆதரவின்றி உள்ளார்.


இளம்பெண் தற்கொலை  

தஞ்சாவூர், மார்ச் 20-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள  மருங்கப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழி லாளி நீலகண்டன். இவரது மனைவி அமுதா. இவர் களுக்கு அஸ்வந்த் (21) என்ற மகனும், அஸ்மிதா (19)  என்ற மகளும் உள்ளனர்.  இந்நிலையில், ஞாயிறன்று ‘‘வீட்டு வேலை எதுவும்  செய்வதில்லை, எப்போதும் டிவி பார்ப்பதும், தூங்குவது மாக இருக்கிறாய்’’ என அஸ்மிதாவை அவரது தாயார்  அமுதா கண்டித்ததாகக் கூறப்படுகிறது.  இதனால், மனமுடைந்து, வீட்டை விட்டு வெளி சென்ற  அஸ்மிதா வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பெற்றோர், சகோதரர் மற்றும் உற வினர்கள் அவரை பல இடங்களிலும் தேடிவந்தனர்.  இந்நிலையில், திங்கட்கிழமை சேதுபாவாசத்திரம் சாலையில், தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப் பில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.  இதையடுத்து அவரது பெற்றோர்கள் வந்து பார்த்த  போது, இறந்து கிடந்தது காணாமல் போன அஸ்மிதா  என்பது தெரிய வந்தது. இதுகுறித்து காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த   சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு  பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய் வுக்காக அனுப்பி வைத்தனர்.


கலைதிருவிழாவில் வென்றவர்களுக்கு  பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருவாரூர், மார்ச் 20-  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல்,  புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு அகற்றுதல்,  கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் குறித்த 235 மனுக்  களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சி யர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நட வடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒரு வருக்கு ரூ.9,050 மதிப்பிலான மூன்று சக்கர  சைக்கிள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில்  அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் தங்கி பயி லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்  களுக்கிடையே நடைபெற்ற கலைதிருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழு டன் கூடிய கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.