ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, செப்.23 - திருச்சி மாவட்ட ஊர்காவல் படையில் 37 வீரர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 35 ஆண்களுக்கும், 2 பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி அடைந்தவர்கள் அல்லது தோல்வி அடைந்தவர்கள் இதில் சேர விண்ணப் பிக்கலாம். 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆண்கள் 165 சென்டி மீட்டரும், பெண்கள் 155 சென்டி மீட்டரும் உயரம் உடையவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க கூடாது. மேலும் விளையாட்டு வீரர் மற்றும் பேண்ட் வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னு ரிமை மற்றும் உடற்தகுதி தேர்வில் தளர்வு வழங்கப் படும். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஊர்காவல்படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5 தபால்தலை ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட உறையு டன் காவல் உதவி ஆய்வாளர், ஊர்காவல்படை அலுவல கம், சுப்ரமணியபுரம், ஆயுதப்படை வளாகம், திருச்சி - 620020 என்ற முகவரிக்கு செப். 27 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.
வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
அரியலூர், செப்.23 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வான திரையான்பட்டினம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது. முகாமில் பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தை நலம், அறுவை சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை மருத்து வம், கண் பரிசோதனை, பல் நோய்கள், நுரையீரல் நோய்கள், இருதய நோய்கள், நரம்பியல் நோய்கள், சித்த மருத்துவம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காச நோய், உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை கள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரத்த பரிசோதனை, இசிஜி மற்றும் ஸ்கேன் பரி சோதனை செய்து வருகின்றனர். விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்க ளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இம்முகாமில் சுற்றுவட்டார பகுதிகளி லிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கவரிங் நகையை தங்க நகை என விற்க முயன்றவர்கள் கைது
தஞ்சாவூர், செப்.23 - தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் கெலன்(29). சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு 2 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களிடம் இருந்த கவரிங் நகையை ஜஸ்டின் கெலனிடம் காட்டி, “இது தங்க நகை வாங்கிக் கொள்ளுங்கள். விலை குறைத்து தரு கிறோம்” என்று கூறி வற்புறுத்தி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ஜஸ்டின் கெலன், தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இரண்டு பெண்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அந்தப் பெண்கள் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பகுதியை சேர்ந்த மகேஷ்வரி (30), லலிதா (25) என்பதும், கவரிங் நகையை தங்க நகை என்று கூறி விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கிழக்கு காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் காவல்துறையினர் மகேஷ்வரி, லலிதா இருவரையும் கைது செய்தனர்.
விவசாயிகள் குறைதீர் முகாம்
மயிலாடுதுறை, செப்.23 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருக தாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர் முருக கண்ணன், இணை இயக்குநர் (வேளாண்மை சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.