பேராவூரணி வட்ட வருவாய் தீர்வாயம் ஜூன் 23 தொடக்கம்
தஞ்சாவூர், ஜூன் 17- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி வட்ட அலுவலகத்தில் 1431 ஆம் பசலிக்கான வட்ட வரு வாய் தீர்வாய கணக்கு தணிக்கை ஜூன் 23, 24, 28, 29 ஆகிய 4 தினங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடை பெறவுள்ளது. ஜூன் 23 பெருமகளூர், ஜூன் 24 குருவிக்கரம்பை, ஜூன் 28 ஆவணம், ஜூன் 29 பேராவூரணி வருவாய் சரகத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு கணக்கு தணிக்கை நடைபெறும். வருவாய் தீர்வாயம் நடை பெறும் நாட்களில், பட்டா மாறு தல், எல்லைப் பிரச்சனைகள், வீட்டுமனை, விதவை, முதி யோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகள் குறித்து, சம்பந்தப் பட்ட வருவாய் தீர்வாய அலுவ லரிடம் மனு அளித்து தீர்வு காணலாம் என பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் தெரி வித்துள்ளார்.
கும்பகோணத்தில் ரூ.1.30 கோடி பருத்தி ஏலம்
கும்பகோணம், ஜூன் 17- தஞ்சாவூர் மாவட்டம் விற்பனை குழு கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூர் விற்பனை குழு செயலாளர் சுரேஷ்பாபு தலை மையில் விற்பனைக்கூட கண்கா ணிப்பாளர் பிரியா மாலினி முன்னி லையில் ஏலம் நடைபெற்றது. இதில், கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், கதிரா மங்கலம் மற்றும் செம்பனார் கோவில் சார்ந்த பதினோரு வியா பாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி மதிப்பு சராசரியாக ரூ.1.30 கோடிக்கு ஏலம் போனது. இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை ரூ.12,129, குறைந்தபட்ச விலை ரூ.8,309 சராசரி மதிப்பு ரூ.10,900 என்று ஏலம் போனது.
மனைப்பிரிவு, கட்டிட அனுமதி ஆன்லைன் விண்ணப்பம் குறித்த பயிற்சி
தஞ்சாவூர், ஜூன் 17- மனைப்பிரிவு, கட்டிடங்கள் கட்டுவதற்கான டி.டி.சி.பி அனும திக்கு ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்ட அலுவலர் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது, தமிழ்நாடு முழுவதும் மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி இணையவழி மூலம் மக்கள் எளிதாக பெறும் வகையில் நடைமுறைப்படுத் தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் இணையவழி செயல்படுத்தப்பட, நகர் ஊரமைப்பு துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சியும் பொது மக்கள் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சிரமங்களை தீர்க்கும் வகையிலும் சிறப்பு முகாம் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் தஞ்சாவூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில், சென்னை இணை இயக்குநர் எஸ்.சங்கரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் சங்க கிளை அமைப்பு
தஞ்சாவூர், ஜூன் 17- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், சங்கரநாதர் குடிக்காடு கிராமத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான, புதிய கிளை அமைப்பு கூட்டம் ஒன்றியப் பொருளாளர் ராதிகா தலைமையில் நடைபெற்றது. இதில், தலைவராக தவச் செல்வி, செயலாளராக ரவிச்சந்தி ரன், பொருளாளராக பாக்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
சிஐடியு கோரிக்கையை ஏற்பு துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஒப்புதல்
திருவாரூர், ஜூன் 17- திருவாரூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படை யில் பணியாற்றி வரும் 123 துப்புரவு பணியாளர்க ளுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இது குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கடிதத்தில் ஊழியர்களு க்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையர் மீது சம்பள சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நிலுவை யிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். இதனையடுத்து வெள்ளியன்று நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற் கான சம்பளத்தை வழங்கியிருக்கிறது. நிதி பற்றாக்குறை காரணமாக குறித்த நேரத்தில் சம்பளம் வழங்கமுடியவில்லை எனவும், நிலுவை யிலுள்ள 3 மாதங்களுக்கான சம்பளத்தையும் உடன் வழங்க ஏற்பாடுகளை செய்வதாகவும் நிர்வா கத்தின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்பனா சாவ்லா விருது: ஆட்சியர் தகவல்
திருவாரூர், ஜூன் 17- 2022 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு திருவாரூர் மாவட்டத்திலுள்ள வீர தீர செயல் புரிந்த பெண்கள் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கல்பனா சாவ்லா விருது பெற நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண் ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் https://awards.tn.gov.in என்ற அரசு இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் சம்பந்தப் பட்ட விருதினை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சூவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா சாலை, பெரியமேடு, சென்னை 600003 என்ற முகவரிக்கு ஜூன்-26க்குள் சேர்ந்திடும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது 7401703500 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இஸ்லாமியர்கள் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை, ஜூன் 17- அறவழியை போதித்த நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜகவின் நூபுர் சர்மா மற்றும் நவின் ஜிண்டால் ஆகியோரை கைது செய்து நடவ டிக்கை எடுக்கக் கோரியும், மதத்தின் பெயரால் நாட்டை சூறையாடுவதை கண்டித்தும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டங்கள் வெள்ளியன்று நடைபெற்றது. தொழுகைக்கு பிறகு பள்ளிவாசல்கள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்க ணக்கானோர் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். சங்கரன்பந்தல் பெரிய பள்ளிவாசல் முன்பு ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர். அதேப்போன்று ஆயப்பாடி, பெரியகூத்தூர், பொறையார், ஆக்கூர், மடப்புரம், நீடூர் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.