குழந்தைகளுக்கு புத்தகம் பரிசு
புதுக்கோட்டை, ஆக.5 - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறி வியல் இயக்கமும் இணைந்து 5 ஆவது புதுக் கோட்டை புத்தகத் திரு விழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக் கோட்டை நகர்மன்றத்தில் நடத்தி வருகின்றன. அதனொரு பகுதியாக புத்தகத் திருவிழாவின் 7- ஆவது நாளான வெள்ளிக் கிழமை புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத் துவமனையில் பிறந்த குழந் தைகள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகங்கள் பரி சளிக்கப்பட்டன. வெள்ளிக் கிழமை பிறந்த 28 குழந்தை களுக்கு திருக்குறள் புத்தகங் களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பரிசளித்தார். இந்நிகழ்வில், கோட்டாட் சியர் கி.கருணாகரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல் வர் மு.பூவதி, நிலைய அலு வலர் இந்திராணி, கவிஞர் மு.முருகேஷ், மரு. வீ.சுபாஷ் காந்தி, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
ஓய்வூதியர் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஆக.5 - நாடு முழுவதும் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலகங்கள் முன்பு ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். எல்ஐசி நிர்வாகக் குழு, குடும்ப ஓய்வூதியத்தை 15- லிருந்து 30 விழுக்காடாக உயர்த்துவதற்கு, ஒன்றிய நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக சுமார் மூன்று ஆண்டு கள் காத்திருந்தும், அனுமதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்தும், ஊழியர்களின் ஊதிய உயர்வின் போது ஓய்வூதி யமும் உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டப் பொதுச் செயலாளர் வி.சேதுராமன் தலைமை வகித்தார். எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்கச் செயலாளர் சோழ.சுந்தர பாண்டியன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் எஸ்.செல்வராஜ், எல்ஐசி ஓய்வூதியர் சங்க கோட்டச் செய லாளர் ஆர்.புண்ணியமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.
பூண்டி புஷ்பம் கல்லூரியில் போலி ஆவணங்களை கொடுத்து பேராசிரியர்கள் பணி நியமனம்
தஞ்சாவூர், ஆக.5 - தஞ்சாவூர் அருகே பூண்டியில் புகழ்பெற்ற புஷ்பம் கலைக் கல்லூரி 1956 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியை காலஞ்சென்ற முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்ற னர். இக்கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவ லின்படி, காவல் ஆய்வாளர் வெ.சசிகலா விசாரணை நடத்தி னார். இதையடுத்து இக்கல்லூரியில் கடந்த 2017 ஆம் ஆண்டு உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில், இனசுழற்சி முறையை பின்பற்றவில்லை. இதில் உதவி பேராசிரியர்கள் எஸ்.கே.தியாகராஜன், சி.கற்பகசுந்தரி ஆகிய இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என போலியான சாதிச் சான்றிதழை வழங்கி பணியில் சேர்ந்துள்ள னர். இதை உண்மை என சமர்ப்பித்து, அரசை ஏமாற்றி கல்லூரி நிர்வாகம் 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவர்க ளுக்கு ஊதியமாக ரூ.55 லட்சம் பெற்று வழங்கியுள்ளது. எனவே இனசுழற்சி முறையில் பணி நியமனத்துக்கு தேர்வானவர்களின் சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல், உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கிய தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி முன்னாள் துணை இயக்குநர் டி.அறிவுடை நம்பி, உதவிப் பேராசிரியர்கள் எஸ்.கே.தியாகராஜன், சி.கற்பகசுந்தரி, கல்லூரி தாளாளரும் முன்னாள் எம்பியும், காலஞ்சென்றவருமான கே.துளசிஅய்யா வாண்டையார் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மீன் வளர்ப்புக்கு மானியம்: விண்ணப்பிக்க அழைப்பு
மயிலாடுதுறை, ஆக.5 - 2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க உள்ளீடு மானியம் வழங்கப்ப டும் என்ற அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் மீன் வளர்ப்பினை ஊக்கு வித்திட மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 250 முதல் 1000 ச.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டை களில் கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன் குஞ்சுகள், மீன் தீவனம் உரங்கள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான ஒரு அல கிற்கு ஆகும் செலவினம் ரூ.36,000. இதில் 50 சதவீதம் மானியமாக ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.18,000 வழங்கப்படும். மேற்கண்ட மானிய மானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத் திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறு வதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எனவே மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் 41-ஏ தென்பாதி மெயின் ரோடு, பெஸ்ட் பள்ளி வளாகம் எதிரில், சீர்காழி – 609111 என்ற முகவரியில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், மயிலாடு துறை (இருப்பு) சீர்காழி அலுவலகத்தை அணுகுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.