அரியலூர் நகர் பகுதியிலுள்ள ஏரிகளை தூர்வாரக் கோரிக்கை
அரியலூர், மார்ச் 27- அரியலூர் நகர் பகுதியிலுள்ள ஏரிகளை தூர்வார வேண்டும் என ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதியிடம் சமூக ஆர்வலர் சுகுமார் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், ‘‘அரியலூர் நகரில் 20 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட செட்டி ஏரி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதரமாக விளங்கியது. தற்போது இந்த ஏரி தூர்வாரப்படாமல், ஏரியைச் சுற்றி முள் புதர்கள் மண்டி கிடக்கின்றன. மேலும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே ஏரியை தூர்வார மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட துரை ஏரியையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை சிறப்பு குறைதீர் கூட்டம்
அரியலூர், மார்ச் 27- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட உடையார்பாளையம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை வட்டங்களுக்குட்பட்ட அனைத்து பகுதி களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர் கூட்டம் மார்ச் 29 அன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு பயனடையலாம் என ஆட்சி யர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
வத்திராயிருப்பில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
திருவில்லிபுத்தூர், மார்ச் 27- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் தென்னை விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்தையா தலைமை வகித்தார். செயலாளர் காளிதாசன் முன்னிலை வகித்தார். தென்னை விவசாயி கள் சங்க மாநிலச்செயலாளர் அ.விஜயமுருகன் உரை யாற்றினார். இதில் சந்தையில் தேங்காய் விற்கும் போது விவசாயி களிடம் லாபக்காய் பெறுவதை தவிர்க்கும் பொருட்டு வத்தி ராயிருப்பு பகுதியில் அரசு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். தேங்காய் கிலோவுக்கு ரூ.50 விலை நிர்ணயிக்க வேண்டும். வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140க்கு கொள்முதல் செய்ய வேண்டும். தென்னையை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவாடானையில் சிஐடியு, விவசாயிகள் பிரச்சாரம்
இராமநாதபுரம், மார்ச் 27- திருவாடானை பகுதியில் மக்கள் விரோத மோடி அர சைக் கண்டித்து ஏப்ரல் 5 அன்று நடைபெறும் தில்லி பேரணி யை விளக்கி சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடா னையில் நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது. திருவாடானை தியாகிகள் பூங்கா அருகில் தொடங் கிய நடைபயண பிரச்சார இயக்கத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்ஏ.சந்தானம், விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் இராமநாதன், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் அருள் ஆகியோர் தலைமை தாங்கி னர். சிஐடியு மாவட்ட செயலாளர் எம் சிவாஜி, விவசாயி கள் சங்க தலைவர் எம்.முத்துராமு, மாவட்ட செயலாளர் வி.மயில்வாகனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.சேதுராமு ஆகியோர் பேசினர்.
செம்பட்டி அருகே விபத்தில் ஒருவர் பலி
சின்னாளப்பட்டி, மார்ச் 27- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் பைனான்சியர் பிரவின் (38). இவர் வத்தலக் குண்டுக்கு பணி சம்மந்தமாக காரில் வந்தபோது எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேராக மோதி கவிழ்ந்தது. இதில் பிரவின் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். வேனில் பயணம் செய்த சின்னாளபட்டியைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். செம்பட்டி காவல்துறையினர் ஆத்தூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து செம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னை வாலிபர் பலி
திருநெல்வேலி, மார்ச் 27- சென்னை பெரவலூர் வெற்றிநகரைச் சேர்ந்தவர் லட்சு மணமூர்த்தி. இவரது மகன் ஸ்ரீராம் ( 22). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் சில ருடன் நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்தார். அங்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட தலை யணையில் தடையை மீறி அனைவரும் ஞாயிற்றுக் கிழமை குளிக்கச் சென்றனர்.குளித்துக் கொண்டு இருக்கும் போது, ஸ்ரீராம் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்றினார்கள். அப்போது, அவர் பேச்சு மூச்சின்றி காணப்பட்டார். இதையடுத்து அவரை அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்ரீராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
1,034 கிலோ கஞ்சா அழிப்பு
திருநெல்வேலி ,மார்ச் 27- நெல்லை மாவட்டத்தில் இதுவரை 12 வழக்குகளில் 1,304 கிலோ பிடிப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.3.26 கோடி ஆகும். அவை திங்களன்று நெல்லை சரக டி.ஐ.ஜி. பிர வேஷ் குமார் முன்னிலையில் விஜயநாராயணம் அருகே உள்ள ஒரு பயோ மெடிக்கல் வேஸ்ட் ஆலையில் தீ வைத்து பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.