districts

திருச்சி விரைவு செய்திகள்

பணி நிரந்தரம் செய்க! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  லாரி ஓட்டுநர்கள் கைது

அரியலூர், ஜன.19- செந்துறையை அடுத்த தாமரைப்பூண்டி கிரா மத்தில் தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்  ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு, அகில இந்திய  உழைப்பாளர் ஓட்டுநர் நலச் சங்கத்தை சேர்ந்த ஓட்டு நர்கள் சுண்ணாம்புக்கல் லாரிகளை ஓட்டி வருகின்ற னர். இங்கு பணிபுரியும் ஓட்டுநர்கள் கடந்த 13 ஆண்டு களுக்கும் மேலாக ஒப்பந்த ஓட்டுநர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலையில், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு வழங்கு வேண்டும். அரசு விடு முறை நாட்களில் பணி செய்தால் ஓட்டுநர்களுக்கு இரட்  டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். கேன்டீன், சீருடை  வசதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சுண்ணாம்புக்கல் சுரங்கம் முன்பு  லாரி ஓட்டுநர்கள், அவர்களது குடும்பத்தார் ஆர்ப்பாட்டத்  தில் ஈடுபட்டனர்.  அப்போது, ஆலை நிர்வாகத்தினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதி யின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 56 பேரை தள வாய் காவல்துறையினர் கைது செய்தனர்.


நிலுவையின்றி சம்பளம் கோரி ஜன.30 இல் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன.19- திருவாரூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் சிஐடியு  ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள், என்எம்ஆர் சங்கம் ஒருங்கிணைப்பு மாவட்டக் குழு கூட்டம்  நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் கே.கோவிந்தராசு தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், மாவட்டப் பொருளாளர் ஏ.பி.தனுஷ்கோடி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்  சங்க மாநில குழு உறுப்பினர் ஏ.பி.டி.லோகநாயகி, டி. கலியமூர்த்தி, கே.ஆறுமுகம், கே.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஓஎச்டி (OHT) ஆப்ப ரேட்டர்களுக்கு மற்றும் தூய்மை காவலர்களுக்கு நிலுவை  இல்லாமல் மாதாமாதம் ஐந்தாம் தேதி சம்பளம் வழங்கிட வேண்டும். மாநில குழு முடிவின் படி 30.01.2023 அன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


விளம்பர பதாதைகளை  அகற்ற உத்தரவு

அரியலூர், ஜன.19 - அரியலூர் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்க ளிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில், கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் இடையூறாக கட்டப்பட்டுள்ளதால், மின்வாரிய பணியாளர்கள் பரா மரிப்பு பணியில் ஈடுபடும்போது இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்களை ஏற்படுத்துகிறது.  எனவே, மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில் உள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர பதாகை களை சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக அகற்றக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.