districts

img

காணும் பொங்கலையொட்டி முக்களப்போட்டி

மயிலாடுதுறை, ஜன.16-  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான சந்திரபாடி என்கிற கடலோர மீனவ கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் பொங்கல் விழா கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.  முன்னாள் ஊராட்சி தலைவர் பிரமிளா ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்துத்தரப்பினரும் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.  காணும் பொங்கலான வியாழனன்று சந்திரபாடி முட்டுக்கரையாற்றில், இளைஞர்களுக்கான முக்களப்போட்டி நடைபெற்றது. 500 மீட்டர் தொலைவு நீச்சலடித்து வந்து கரையில் நிறுத்தப்பட்ட மிதிவண்டியை எடுத்துக் கொண்டு, ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள சின்னூர்ப்பேட்டை கிராமத்திற்கு ஓட்டிச்சென்று அங்கே மிதிவண்டியை நிறுத்திவிட்டு, மீண்டும் போட்டி துவங்கிய இடத்திற்கு ஓட்டமாக ஓடிவரவேண்டும்.  இப்போட்டியில், இளைஞர்கள் உற்சாகமாக கலந்துக்கொண்டு வெற்றி பெற்றனர்.  அதனைத்தொடர்ந்து, சந்திரபாடி கோயில் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகள், பரிசளிப்பு கலைநிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.