districts

img

வாலிபர் சங்க விளையாட்டு போட்டிக்கு பரிசு

விழுப்புரம், ஜன.16- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திண்டிவனம் பகுதிக்குழு கீழ்சேவூர் கிளை சார்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்  செவ்வாயன்று நடைபெற்றது. கீழ்சேவூரில் கபடி, செஸ், கேரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறு கின்றன, இதில் வாலிபர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மாணவர்கள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டு விளையாடினர். அப்போது செஸ் மற்றும் கேரம் போர்டு ஆகிய விளையாட்டு உபகரணங்களை திண்டிவனம் பகுதிக்குழு சார்பில் கீழ்சேவூர்  கிளைக்கு வழங்கினர். இந்நிகழ்வில் வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் அ.கண்ணதாசன், வட்டத்தலைவர் எஸ்.பார்த்திபன்,வட்ட செயலாளர் ஏ.ம.சதீஷ்குமார்,மாவட்ட குழு உறுப்பினர் ஜி.ரவிச்சந்திரன், கீழ்சேவூர் கிளை இ.குகன், எஸ்.மணிகண்டன்,  பி.மூர்த்தி, ஆர்.நவீன் மற்றும் கீழ்சேவூர்  கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.