கிருஷ்ணகிரி, ஜன.16 – கிருஷ்ணகிரி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி பகுதி எடையநல்லூரில் அம்பேத்கர் நினைவு கைப்பந்து போட்டி கள் நடைபெற்றது. இதில் பெங்களூரு, சேலம்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை ஓசூர், கிருஷ்ணகிரி, சூளகிரி ஊத்தங்கரை வட்டங்களை சேர்ந்த 22 குழுவினர் விளை யாடினர். போட்டிகளை வாலிபர் சங்க மிடுகரப்பள்ளி நிர்வாகிகள் ஹரி,சஞ்சய் ஒருங்கிணைத்து நடத்தினர். சிபிஎம் மாநகர குழு சார்பில் செயலாளர் நாகேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் மகாலிங்கம்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,லெனின் முருகன்,சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர்,பி.ஜி.மூர்த்தி விளையாட்டு வீரர்களை யும், கைப்பந்து போட்டிகள் ஒருங்கி ணைப்பாளர்களான வாலிபர் சங்க மிடுகரப்பள்ளி நிர்வாகிகள் சஞ்சய், ஹரியையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்த னர். இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் சார்பில் ஹரி சஞ்சய் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.2500 நிதி வழங்கினார்.