மயிலாடுதுறை, ஜன.31 - ஒன்றிய அரசு விவசா யிகளிடம் வாக்குறுதி அளித்த படி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண் டும். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். விவசாயிகள் மீது போடப் பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இறந்துபோன விவசாயி களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. ஆனால், ஒன்றிய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து சம்யுக்த கிசான் மோர்ச்சா வின் அகில இந்திய அறை கூவலை ஏற்று திங்கட்கிழமை நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் துரோக நாள் ஆர்ப்பாட்டம் மாநில செயற்பாட்டுக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. மாவட்ட செய லாளர் எஸ்.துரைராஜ், மாவட் டத் தலைவர் டி.சிம்சன், இயற்கை விவசாயி மாப்ப டுகை ராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்க முருகன் மற்றும் முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைப்பு களின் பொறுப்பாளர்கள் உரையாற்றினர்.
திருச்சிராப்பள்ளி
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒருங்கி ணைப்பாளர் சிவசூரியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட செய லாளர் கே.சி. பாண்டியன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் தங்கதுரை, சிஐடியு நிர்வா கிகள் பேசினர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணி ஒருங்கிணைப் பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால், விவசாயிகள் சங்கம் எல்.ஞானமாணிக்கம், சிபிஎம் மாநகரச் செயலாளர் வடிவேலன் ஆகியோர் பேசி னர்.