திருத்துறைப்பூண்டி, ஜூலை 11 - அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 16 ஆவது மாநாடு முத்துப் பேட்டை நகரம் கொய்யா திருமண மஹாலில் ஞாயி றன்று பேரணியோடு துவங்கப்பட்டது. மாநாட்டு கொடியினை அம்சம் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை ஆர். நிர்மலா வாசித்தார். எஸ். தேவகி வரவேற்புரையாற்றி னார். மாவட்டத் தலைவர் ஆர்.சுமதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் பா.கோமதி வேலை அறிக்கையை முன்மொழிந் தார். மாவட்டப் பொருளா ளர் எஸ்.பவானி வரவு-செலவு அறிக்கை வாசித் தார். மாநாட்டை வாழ்த்தி மாநில துணை செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிஐ டியு மாவட்டத் தலைவர் இரா.மாலதி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்க மாவட்டச் செய லாளர்கள் தவமணி, மாவட்டத் தலைவர் ஏ.பிரேமா உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநில துணை செயலாளர் ஜி.கலைச்செல்வி உரை யாற்றினார். மாவட்டத் தலைவராக எஸ்.பவானி, செயலாளராக பி.கோமதி, பொருளாளராக ஆர்.சுமதி, துணை நிர்வாகி களாக கலைச்செல்வி, தனம், சுலோச்சனா, நிர்மலா உள்ளிட்ட 21 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு அரசியலை முன் னெடுக்கும் பாஜக அரசுக்கு எதிராக மாதர் சங்கம் கள மிறங்க வேண்டும். பாலி யல் தொழிலை சட்டமாக் கும் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். ஊரடங்கு காலங் களில் தமிழகத்தில் 7 ஆயிரம் குழந்தை திருமணங்கள் நடந்திருப்பது வருந்தத் தக்கது. இதை தடுக்க ஒன்றிய - மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். பெண் கள் மீதான பாலியல் சீண்டல் களை தடுக்க கடுமையான சட்டங்களை மாநில அரசு இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.