தஞ்சாவூர், ஜூலை 5 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தஞ்சை மாவட்ட 16 ஆவது மாநாடு திருவையாறு சண்முகப்பிரியா திருமண மண்டபம், மைதிலி சிவராமன் நினைவ ரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி தலைமை வகித்தார். முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.மலர்கொடி கொடியேற்றி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் பி.கலைச் செல்வி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வர வேற்பு குழு செயலாளர் ஆர்.செல்வழகி வர வேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் இ.வசந்தி வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.கலைச்செல்வி வாழ்த்திப் பேசினார். மாநிலச் செய லாளர் எஸ்.கே.பொன்னுத்தாயி நிறைவுரை யாற்றினார். இம்மாநாட்டில், மாவட்டத் தலைவராக எம்.அறிவுராணி, மாவட்டச் செயலாளராக இ.வசந்தி, மாவட்டப் பொருளாளராக என். வசந்தா ஆகியோரும், 11 செயற்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட 27 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டனர். “நூறு நாள் வேலைத் திட்டத்தை முறை யாக செயல்படுத்த வேண்டும். உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நூறு நாள் வேலையை பேரூராட்சி பகுதிக்கும் விரிவு படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடை யூறாக, சமூக பிரச்னைகளுக்கு காரணமாக உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுத்து நிறுத்தப் படவேண்டும். தனியார் நிறுவனங்கள், கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு, சட்டப் பூர்வ சம்பளம் வழங்க வேண்டும். பூதலூர் ஒன்றியம் உசிலம்பட்டியில் மூடப்பட்ட தொடக்கப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும். பூதலூர் சானூரப்பட்டி மேலத்தெரு பட்டியல் இன மக்கள் இடு காட்டை கையகப்படுத்தக் கூடாது. சாஸ்த்ரா நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்டு ஏழைகளுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, பெண்கள் தப்பாட்ட கலைக் குழு முன் செல்ல தேரடியில் இருந்து மண்ட பம் வரை பெண்கள் பங்கேற்ற பேரணி நடை பெற்றது. மாநாட்டைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.