districts

திருக்குறள் தொண்டு அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தினம்

பாபநாசம், ஜன.16-  பாபநாசம் உலகத் திருக்குறள் மையம் மற்றும் திருக்குறள் தொண்டு அறக் கட்டளை சார்பில் 2056 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினம் நடந்தது.  நிகழ்ச்சிக்கு மையத்தின் பொருளாளர் அன்பழகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தார். குருசாமி வரவேற்றார். திருவள்ளுவர் சிலைக்கு மையத்தின் செயலர் ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலர் மோகன், பாவை பைந்தமிழ் பேரவைத் தலைவர் துரையரசன், திராவிட சமுதாய நல அறக்கட்டளை உறுப்பினர் திருஞானம், பட்டுக்கோட்டை அழகிரி பள்ளி முதல்வர் தீபக், ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்கத் தலைவர் ஆறுமுகம் உட்பட  மாலை அணிவித்தனர்.  இதில் அசோக், சத்தியமூர்த்தி, கலைச்செல்வன், ஆசைத்தம்பி, பாண்டியன், இரவி தில்லைநாயகி, தவச்செல்வன், ராஜா, பொன்னே சுரேஷ் உட்பட பலர்  கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை திருக்குறள் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட இணைச் செயலர் பாவை சங்கர் ஒருங்கிணைத்தார். மைய இணைச் செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.