தஞ்சாவூர், ஜன.18 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், தியாகராஜ சுவாமிகளின் 178 ஆவது ஆரா தனை விழா, கடந்த ஜன.14 அன்று துவங்கி யது. நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிழ்வான சனிக்கிழமை அதிகாலை, தியாகராஜ சுவாமி வாழ்ந்த வீட்டில் இருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப் பட்டாகி, மேள தாளங்கள் முழங்க, வீதியுல வாக அவரின் சன்னதிக்கு வந்தனர். பிறகு, நாதஸ்வரம் நிகழ்ச்சியும், பிரபஞ்சம் பால சந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்ச ரத்ன கீர்த்தனை துவங்கியது. இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, கடலுார் ஜனனி, ஓ.எஸ்.அருண், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்ளிட்ட இசை கலைஞர்கள் ஆயிரக்கணக்கனோர் இசை யஞ்சலி செலுத்தினர். இந்த விழா இரவு 11:20 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் நிறைவு பெற்றது.