கால்நடைகளை நோய்களில் இருந்து காக்க ஜன.25 இல் அவிநாசியில் கருத்தரங்கம்
திருப்பூர், ஜன.18- கால்நடைகளைத் தாக்கும் அம்மை நோயில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்கும் பாரம்பரிய வைத்திய முறை குறித்து அவிநாசி கொங்கு கலையரங்கில் ஜன.25 ஆம் தேதி சனியன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கருத்தரங்கம் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்திலும், அவிநாசி வட்டாரம் முழு வதும் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலுக்கு உட்பட்ட கால்நடைகள் அவற்றிலிருந்து மீண்டு வருவது மிக வும் சிரமமாக இருக்கிறது. இது தவிர மாடுகளில், மடி நோய், குடற்புழு நோய் போன்றவையும், கோழிக ளுக்கு வரும் வெள்ளை கழிச்சலும், ஆடுகளுக்கு வரும் கொள்ளை நோயும், கழிச்சல் நோயும் விவசாயிகளுக்கு மிகப்பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின் றன. எனவே இந்த நோய்களிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் பாரம்பரிய வைத்திய முறைகளை, ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் பேராசிரியர் புண்ணிய மூர்த்தி விவசாயிகளுக்கு தெரிவிக்கிறார். குறிப்பாக இயல்பாகக் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு கால் நடைகளுக்கு வரும் நோய்களைக் குணப்படுத்தும் வழி முறைகள் இதில் தெரிவிக்கப்பட உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் இதில் பங்கேற்று பயனடைய லாம். வனத்துக்குள் திருப்பூர் வெற்றி அமைப்பு மற்றும் அவிநாசி கொங்கு வேளாளர் அறக்கட்டளை ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
நாடகக் கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு
கோவை, ஜன.18- போதைப் பழக்கத்திற்கு எதிராக, கோவையில் நாடகக் கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத் தும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரு கிறது. தமிழகம் முழுவதும் போதைப் பழக்கத்திற்கு எதி ரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாடக கலைஞர் மூலம் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத் தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட மது விலக்கு, ஆயத்தீர்வு துறை சார்பாக மாவட் டம் முழுவதும் தாலுகா வாரியாக நாடகக் கலைஞர்கள் வீதி நாடகங்களை நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதி யாக, மேட்டுப்பாளையம், காரமடை, மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், சுந்தராபுரம் சுற்றுவட்டாரப் பகுதி களில் நாடகக் கலைஞர்கள் தத்துரூவமான நாடகங்களை அரங்கேற்றி பொதுமக்கள் மத்தியில் போதைப் பழக் கத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரு கின்றனர். மேலும், சமீப காலத்தில் நாடகக் கலைஞர் களுக்கான பணிகள் கேள்விக்குறியாகியுள்ள நிலை யில், அரசு விழிப்புணர்வு, திட்ட செயல்பாடுகளுக்கு நாடகக் கலைஞர்களை பயன்படுத்துவது மிகவும் மகிழ்ச் சியளிப்பதாக நாடக கலைஞர்களும் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய நாடகக் கலைஞர் பூங்குயில் பாபு கூறுகையில், கோவை மாவட்டம், மது விலக்கு ஆயத் தீர்வு சார்பாக கள்ளச்சாராயம் மற்றும் போதை ஒழிப்பு நாடகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தாலுகா வாரியாக சென்று நேரடியாக மக்கள் மேடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் மது உள்ளிட்ட போதைப் பொருட்களால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவ தோடு, உடல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அரசின் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளில் நாடகக் கலைஞர்களை பயன் படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார். இதே போல ஒன்றிய அரசின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் நாடகக் கலை ஞர்களுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தாய், மகனை வெட்டிய சம்பவத்தில் ஒருவர் கைது
கோவை, ஜன.18- கோவையில் முன் விரோதத்தால் தாய் மற்றும் மகனை வெட்டிய 7 பேரில் ஒருவர் கைது செய்த நிலையில், மற்றவர்களை காவல் துறையினர் தீவிர மாக தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், கே.என்.ஜி புதூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் அடைக்கலராஜ் (33). இவ ருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த பிரான் சிஸ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. பிரான்சிஸ் வீட்டை காலி செய்து குடும் பத்துடன் தொண்டாமுத்தூர் சென்று வசித்து வந்தார். அங்கு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகரா றில் பிரான்சிஸ் மனைவி அவரை பிரிந்து சென்றார். இதனால் மன வேதனை அடைந்த பிரான்சிஸ் விரக்தி அடைந்து கடந்த 15 ஆம் தேதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தக வல் அறிந்த அடைக்கலராஜ் மற்றும் அவரது தாயார் சுமதி ஆகியோர் பிரான் சிஸ்ஸின் இறுதி சடங்கிற்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்து இருவரும் வீடு திரும்பினர். இதனை பார்த்த பிரான்சிஸ் ஸின் தம்பி கவுதம், அடைக்கலராஜை தடுத்து நிறுத்தி தனது அண்ணன் தற் கொலைக்கு நீ தான் காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப் போது அங்கு இருந்தவர்கள் அவர் களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனாலும் கவுதம் மறுநாள் இரவு தனது நண்பர்கள் 7 பேரை அழைத்து கொண்டு அடைக்கலராஜின் வீட்டிற்கு சென்ற கவுதம், அடைக்கல ராஜையும், அவரது தாயார் சுமதியை யும் அரிவாளால் வெட்டியதாக கூறப் படுகிறது. அதிர்ச்சியடைந்த அடைக் கலராஜ் வீட்டிலிருந்து வெளியே ஓடி யுள்ளார். அப்போது வெளியே இருந்த கவுதமின் நண்பர்கள் அடைக்கல ராஜை கத்தியாலும், அரிவாளாலும் வெட்டி தப்பி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுமதி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் அடைக்கலராஜை வெட்டியது கவுதம் மற்றும் அவருடையை நண்பர்கள் சந் துரு, பிரபாகரன், சந்தோஷ், லோகேஷ் மற்றும் இரண்டு பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தப்பி ஓடிய 7 பேரையும் தேடி வந்தனர். அதில், செஞ்சேரி மலையாண்டிபாளையம் பகுதியிலிருந்த பிரபாகரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மற்ற வர்களை போலீசார் தீவிரமாக தேடி வரு கின்றனர்.
சேலம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பிரசவம்
சேலம், ஜன.18- சேலம் ரயில் நிலையத்தில், பெண் ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்பு லனஸ் ஊழியர்களுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (25) - லைலா (24) தம்பதியினர், கேரளாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான லைலாவை, வெள்ளியன்று சூர்யா அழைத்துக்கொண்டு, கேரளாவில் இருந்து சேலம் வழியாக ரயில் மூலம் காட்பாடிக்கு புறப்பட்டுச் சென்றார். ரயில் நள்ளிரவு 11.50 மணிக்கு சேலம் ரயில்வே ஜங்ஷன் அருகே வந்தபோது லைலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற் பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீசார், 108 ஆம் புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 ஆவது மேடையில் தயாராக இருந்தனர். இதை யடுத்து வந்த ரயிலிருந்து உறவினர்கள் லைலாவை இறக்கி, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கண்ணன், ஓட் டுநர் வடிவேல் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். தொடர்ந்து லைலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயையும், மகளையும் சேலம் அரசு மருத்துவ மனையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். விரைந்து செயல்பட்டு இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து, தாயையும், குழந்தை யையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ரயில்வே பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
தார்சாலை கேட்டு பொதுமக்கள் மறியல்
தருமபுரி, ஜன.18- பென்னாகரம் அருகே தார்சாலை அமைத்து தர வேண் டும், என வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஈச் சம்பள்ளம், புதுப்பட்டி, எட்டிக்குழி, நெற்குந்தி, கருப்பைய னூர், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக ளுக்கு போதுமான சாலை வசதி இல்லாததால், நாள்தோறும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதரப் பணிகளுக்காக பென் னாகரம், தருமபுரி பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மண் சாலையானது குண்டும், குழியுமாக உள்ளதால் தார்சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ள னர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆவேசமடைந்த மக்கள், வெள்ளியன்று ஈச்சம்பள்ளம் பகுதி யில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர், சம் பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப் போது, தார்சாலை அமைக்க விரைவில் ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் அளித்த உறுதியின்பேரில், பொதுமக்கள் மறி யலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஜன.28 முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி
உடுமலை, ஜன.18- உடுமலைப்பேட்டையில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு ஜன.28 ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரல் 14 ஆம் தேதி வெளியி டப்பட்டது. இதில் குரூப் 4 (கிராம நிர்வாக அலுவலர், இள நிலை உதவியாளர், பில் கலெக்டர் / தட்டச்சர் மற்றும் சுருக்கெ ழுத்து தட்டச்சர்) தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளி யிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தின் உடுமலைப்பேட்டை எக்ஸ்டென்சன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள கூடுதல் பயிற்சி மையத்தில் ஜன.28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவல கத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். போட்டி தேர்வுக்கு பயிலும் தேர்வர்கள் அனைவரும் இப்ப யிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளை நோய்களில் இருந்து காக்க ஜன.25 இல் அவிநாசியில் கருத்தரங்கம்
திருப்பூர், ஜன.18- கால்நடைகளைத் தாக்கும் அம்மை நோயில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்கும் பாரம்பரிய வைத்திய முறை குறித்து அவிநாசி கொங்கு கலையரங்கில் ஜனவரி 25ஆம் தேதி சனியன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கருத்தரங்கம் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்திலும், அவிநாசி வட்டாரம் முழுவதும் கால்நடைகளுக்கு அம்மை நோய்த் தாக்குதல் ஏற்பட்டு உள் ளது. இந்த நோய் தாக்குதலுக்கு உட்பட்ட கால்நடைகள் அவற் றிலிருந்து மீண்டு வருவது மிகவும் சிரமமாக இருக்கிறது. இது தவிர மாடுகளில், மடி நோய், குடற்புழு நோய் போன்றவையும்,கோழிகளுக்கு வரும் வெள்ளை கழிச்சலும், ஆடுகளுக்கு வரும் கொள்ளை நோயும், கழிச்சல் நோயும் விவசாயிகளுக்கு மிகப்பெரும் பொருளாதார இழப்பை ஏற்ப டுத்துகின்றன. எனவே இந்த நோய்களிலிருந்து கால்நடைகளை பாது காக்கும் பாரம்பரிய வைத்திய முறைகளை, ஓய்வு பெற்ற கால் நடை மருத்துவர் பேராசிரியர் புண்ணியமூர்த்தி விவசாயிக ளுக்கு தெரிவிக்கிறார். குறிப்பாக இயல்பாகக் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு கால்நடைகளுக்கு வரும் நோய்க ளைக் குணப்படுத்தும் வழிமுறைகள் இதில் தெரிவிக்கப்பட உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் இதில் பங்கேற்று பய னடையலாம். வனத்துக்குள் திருப்பூர் வெற்றி அமைப்பு மற் றும் அவிநாசி கொங்கு வேளாளர்அறக்கட்டளை ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
எலக்ட்ரிக்கல், பிளம்பிங் இலவச பயிற்சி வகுப்பு
திருப்பூர், ஜன. 18 - திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, இலவச எலக்ட்ரிக்கல் வயரிங், பிளம்பிங் வேலை மற்றும் வீட்டு உபயோக சாதனங் கள் சரி செய்தல் பயிற்சி வகுப்பை கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் நடத்துகிறது. திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இந்த 30 நாள் முழு நேரப் பயிற்சி நடைபெ றுகிறது. இதில், சேர்வதற்கு வரும் 24ஆம் தேதி வெள்ளியன்று நேர்காணல் நடைபெறும். 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட எழுதப் படிக்கத் தெரிந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு விண்ணப்பிக்க “கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 335/ பி-1, வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கேயம் சாலை, விஜயாபுரம் பகுதி, திருப்பூர் - 641606.” என்ற முகவ ரிக்கு நேரில் வருமாறு பயிற்சி நிலைய இயக்குநர் சதீஷ்குமார் கூறியுள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 9489043923, 9952518 441, 8610533436 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்குச் சந்தை முதலீட்டில் ரூ.1 கோடி 65 ஆயிரம் மோசடி
பங்குச் சந்தை முதலீட்டில் ரூ.1 கோடி 65 ஆயிரம் மோசடி கோவை, ஜன.18- ஆன்லைன் பங்குச்சந்தை முதலீட்டில் ரூ.1 கோடி 65 ஆயி ரம் ரூபாய் தொகையை இழந்து ஏமாற்றப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் தனியார் நிறுவனத்தில் துணை மேலாள ராக பணியாற்றிய யுவராஜ் (71) என்பவர் ஓய்வு பெற்ற பின்னர் கோவை, தண்ணீர் பந்தல் பகுதியில் குடியேறினார். இவர் மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ் அப் மூலம் லிங்க் வந்து உள்ளது. மேலும், அதில் பேசிய நபர்கள் ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி உள்ளனர். இதனை நம்பிய யுவராஜ் அந்த நிறுவனத்தின் கூறிய படி பல்வேறு தவணை களில் ரூ.1 கோடியே 65 ஆயிரத்தை முதலீடு செய்து உள்ளார். அவர்கள் கூறியது போன்று எந்த ஒரு லாபம் கிடைக்கவில்லை. பின்னர் தனது பணத்தை திரும்பப் பெற யுவராஜ் முயற்சித்த போது, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பை துண்டித்து விட்டனர். இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த யுவராஜ் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார். பிரபல நிறுவனங்களின் பெயரை பயன் படுத்தி ரூ.1 கோடி 65 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த மாதப்பன் என்ப வரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து மோசடி செய்த பணத்தை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்து வருகிறது.
இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு போலீசார் திணறல்
கோவை, ஜன.18- கோவை மாநகரில் 12 வெவ்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை, கரும்புக்கடை பள்ளி வீதியை சேர்ந்தவர் அல் ஹம்துலில்லாஹ் (35). இவர் தனது இருசக்கர வாகனத்தை பூமார்க்கெட் பகுதியில் நிறுத்தி சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் காணா மல் போயிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல கோவை சித்தாபுதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (56). இவர் டாடாபாத்தில் உள்ள பார்சல் சர்வீஸ் மையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சாவியை எடுக்காமல் உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது பைக் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து ரமேஷ்குமார் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (29). அவர் தனது இரு சக்கர வாகனத்தை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு தருமபுரி சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனமும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போன்று கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (48). சங்கனூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் கண்ணன் (45). வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (36). திருப்பூரை சேர்ந்த பவித்ரா மற்றும் கணபதியை சேர்ந்த சரண் ராஜ் (23). பல்லடத்தை சேர்ந்த மகாலிங்கம் (31). பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்(51). காளப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயசீலன்(33). பொள்ளாச்சியை சேர்ந்த பிரகதீஸ்வ ரன் (27). ஆகியோர் இருசக்கர வாகனம் அடையாளம் தெரி யாத நபர்கள் திருடி சென்று விட்டதாக அடுத்தடுத்து கோவை மாநகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதை யடுத்து இந்த 12 இருசக்கர வாகன திருட்டு புகார்கள் குறித்தும் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் விடுமுறையையொட்டி அடுத்தடுத்து தொடர் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிய சம்பவம் போலீசாரை கலக்கத்திற்குள்ளாக்கி உள்ளது.
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக சீமான் தேர்தல் பரப்புரை: தடை செய்ய பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஈரோடு, ஜன. 18- அரசியல் அமைப்பு சட்டத் திற்கு எதிராக மக்களிடையே பேசி கலவரத்தை தூண்டும் சீமான் தேர் தல் பரப்புரையை தடை செய்ய பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ப.ரத்தினசாமி காவல் கண்காணிப்பாளரிடம் சனி யன்று அளித்த மனுவில் தெரி வித்திருப்பதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணி கள் நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் தேர்தல் விளம்பரத்திற்காகவும், சுயலாபத் திற்காகவும் மக்களிடையே கல வரத்தை தூண்டும் வகையில் இனம், மொழி அடிப்படையில் பிரி வினைவாத கருத்துக்களை பேசு வதை வழக்கமாகக் கொண்டுள் ளார். அண்மையில் அவர், கிறிஸ்த வர்களும், அரபு மொழி பேசும் இஸ் லாமியர்களும் தமிழர்கள் அல்ல என சிறுபான்மையின மக்கள் மீது வன்மத்தை தூண்டும் வகையில் பேசி உள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின் போது தலித்துகளுக் கும், தலித் அல்லாதவர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில், அருந்ததியர் சமூ கத்தை பொதுவெளியிலும், பத்தி ரிகையாளர்கள் சந்திப்பிலும், தேர் தல் பரப்புரை பொதுக் கூட்டங்களி லும் கொச்சைப்படுத்தி பேசினார். இதனால், நாம் தமிழர் கட்சியின ருக்கும், தலித் மக்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் கள் ஏற்பட்டு கலவரச் சூழல் உரு வாகி வன்கொடுமை தடுப்புச் சட்டப் படியும் தேர்தல் நடத்தை விதிமுறை கள் படியும் வழக்குகள் பதிவு செய் யப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலு வையில் உள்ளது. தற்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர் தல் நடைபெறவுள்ள சூழலில், தந்தை பெரியார் மீது சீமான் வேண் டுமென்றே வீண் அவதூறுகளை பொதுவெளியில் பத்திரிகையாளர் கள் சந்திப்பில் பரப்பி வருகிறார். இதனால் தமிழக முழுவதும் ஏற் பட்ட கொந்தளிப்பினால் பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 70க் கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது பதியப்பட்டுள்ளது. தற்போது ஈரோட்டில் தேர்தல் பரப்புரையை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு மீண்டும் மக்களிடையே இனம், சாதி, மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசி கலவரத்தை தூண்டி விட சீமான் முயற்சிக்கிறார். அரசியல மைப்புச் சட்டப்படி இது மாபெரும் குற்றமாகும். ஆகவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழ லில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மக்களிடையே இனம், சாதி, மொழி அடிப்படையில் பிரி வினைவாத கருத்துக்களை பேசி, வீண் அவதூறுகளை பரப்பி தமி ழர்களிடைய கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் சீமான் மீது உரிய வழக்குகள் பதிவு செய்வதோடு அர சியலமைப்புச் சட்டத்தின் படியும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படியும் கலவரத்தை தூண்டும் தேர்தல் பரப்புரையை தடை செய் திட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல திராவிடத் தமிழர் கட்சி தலைவர் சி.வெண்மணி தலை மையில் கொங்கு விடுதலைப் புலி கள் கட்சியின் மாநில பொதுச் செய லாளர் விஸ்வநாதன் ஆகியோர், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை மேற் கொள்ள சீமானுக்கு தடை விதிக்க கோரி மனு அளித்தனர்.