திருப்பூர், ஜன.18- தெரு நாய்களை கட்டுப்படுத்து வதற்கு அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்கும் வரை, அன்றாடம் கால் நடைகளை இழந்து வாடும் விவ சாயிகளுக்கு சந்தை மதிப்பில் இழப் பீடு வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுக் க்கப்பட்டுள்ளது. தெரு நாய்களால் விவசாயிக ளின் வளர்ப்பு கால்நடைகள் பலியா வது தொடர்ந்து வரும் நிலை யில், சனிக்கிழமை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பல் வேறு விவசாய சங்க நிர்வாகிகளை சந்தித்தார். கால்நடைகள் இழப்பு தொடர்ந்து வருவதைப் பற்றி கவ லையுடன் தெரிவித்த விவசாயிகள் அமைச்சரிடம் தங்கள் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக ஈரோடு, திருப்பூர் மற் றும் கரூர் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்கள் அதிகப்படியாக பெருகியுள்ளன. இதனால் விவசாயிகள் தங்கள் வாழ் வாதாரத்தை இழந்து மிகப்பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகி றார்கள். இதுகுறித்து அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பல முறை மனு கொடுத்தும், போராட் டங்கள் நடத்தியும் உள்ளனர். கடந்த நவம்பர் 23 அன்று மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தலின்படி காங்கே யம் வட்டாட்சியர், அடுத்த நாற்பத்தி ஐந்து நாட்களுக்குள் இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்படும் என்று கடிதம் கொடுத்தார். ஆனால் 50 நாட்கள் ஆகியும் எந்த முன்னேற்ற மும் இல்லை. இது விவசாயிகள் மத்தியில் விரக்தியையும், அதிருப் தியையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட் டும் 300க்கும் மேற்பட்ட கால்நடை களும் 500க்கும் மேற்பட்ட கோழி களும், தெரு நாய்கள் கடித்து பலி யாகி உள்ளன. பெருகிவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த பொறுப் பேற்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் அதற்கு உண்டான கட்டமைப்பை ஏற்படுத்த எள்ளள வும் முயற்சி செய்யவில்லை. நாய் களுக்கு ஏபிசி எனப்படும் இனப் பெருக்க கட்டுப்பாடு செய்தாலும் விவசாயிகளின் பிரச்சனைக்கு இது தீர்வாக அமையாது. எனவே தமிழக அரசு ஒரு கொள்கை ரீதி யான முடிவு எடுத்து தெரு நாய் களை கட்டுப்படுத்த முன் வர வேண் டும். இதன் மூலம்தான் ஒரு நிரந் தர தீர்வை ஏற்படுத்த முடியும். அரசு கொள்கை முடிவு எட்டும் வரை கால்நடைகளை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளின் வாழ் வாதாரத்தை காப்பாற்ற, கால்நடை கள் இழப்புக்கு, அவர்களுக்கு பொருளாதார இழப்பை ஈடு கட்டும் வகையில், சந்தை மதிப்பில் இழப் பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் கால்நடைகளை விட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல முடியவில்லை. மிகப்பெரும் மன உளைச்சலுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவ சாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிவாரணம் அறிவித் தால் அது மிகப் பெரும் அளவில் உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் சாமிநாதனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.