கோவை, ஜன.18- ஆவாரம்பாளையம் பகுதியில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட் டது. கோவை, பீளமேடு நகரக்குழுவிற்குட்பட்ட ஆவா ரம்பாளையம் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதிய கிளை அமைத்து கொடி ஏற்றப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாதர் சங்க பீளமேடு நகரக் குழு உறுப்பினர் மரகதம் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிமணி, மாவட்டக்குழு உறுப்பி னர் அமுதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து பொங் கல் விழா நடைபெற்றது. விழாவில் 250 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி அனைத்து நிர்வாகிகளுக்கும் புத்தகம் கொடுக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் ரீதியான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் கையில் ஏந்தியபடி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய் குமார், பீளமேடு நகரச் செயலாளர் ஏ.மேகநாதன், வாலி பர் சங்க நகரச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.