districts

img

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா போட்டிகள் பரிசளிப்பு விழா

புதுக்கோட்டை, ஜன.16-  கன்னியாகுமரியில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளிவிழா போட்டிகள் பரிசளிப்பு விழாவும், தேசிய நூலக வார விழா போட்டிகள் பரிசளிப்பு விழாவும் வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. புரிசளிப்பு விழாவுக்கு, வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர். வை. முத்துராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக மைய நூலக முதல்நிலை நூலகர் கி‌. சசிகலா வரவேற்க, நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் கண்ணன் நன்றி கூறினார். மாநகராட்சி உறுப்பினர் அறிவுடைநம்பி, பேரா.சா.விஸ்வநாதன். கவிஞர்கள் காசாவயல் கண்ணன், புதுகை புதல்வன், டெய்சிராணி, கவின்பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.