அறந்தாங்கி, ஜன.18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர குழு சார்பாக சூரியமூர்த்தி குளக்கரை குடியிருப்போர் நலச்சங்கம், (தோழர் முத்துராமலிங்கன் நகர்) கட்சி கிளை தொடக்க விழா, சமத்துவ பொங்கல், சிபிஎம் நகர அலுவலகம் திறப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் நகரச் செயலாளர் வழக்கறிஞர் அலாவுதீன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பாண்டி கெளதம் வரவேற்றார். சூரியமூர்த்தி குளக்கரை தோழர் முத்துராமலிங்கன் நகர் குடியிருப்பு நலச்சங்க பெயர் பலகையை கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் ஏற்றினார். கட்சியின் நகரக் குழு அலுவலகத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கவிவர்மன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், கோலப்போட்டி, ஊசிநூல் கோர்த்தல், இசை நாற்காலி, ரொட்டி கவ்வுதல், பானை உடைத்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, தென்றல் நீலகண்டன், மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிவர்மன் ஆகியோர் பரிசு வழங்கி வாழ்த்தினர். நகர்மன்ற துணைத்தலைவர் முத்து (ஏ) சுப்பிரமணியன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தென்றல் கருப்பையா, கே.தங்கராஜ், தாலுகா செயலாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சூரியமூர்த்தி குளக்கரையில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழஙக வேண்டும். சூரியமூர்த்தி குளக்கரையை சுற்றியிருக்கும் பகுதிக்கு தோழர் முத்துராமலிங்கன் நகர் என்ற பெயரை நகராட்சி அங்கீகரிக்க வேண்டும். அறந்தாங்கி நகரில் கோயில் நிலங்கள், சத்திரம் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.