districts

img

ஸ்ரீரங்கத்தில் உள்ள அறிவியல் பூங்கா இம் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும்...?

திருச்சிராப்பள்ளி, மார்ச் 17- திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம், பொறி யியல் மற்றும் கணிதப் பூங்காவை பொதுமக்க ளுக்கு திறந்து விடுவதில் தாமதம் ஏற்படுவ தாக நகர் மக்கள், அறிவியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் பஞ்சக்கரை சாலையில் அமைந்துள்ள பூங்கா,  திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குச் சொந்தமான  மூன்று ஏக்கர் நிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்  தின் கீழ் ரூ.15 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பெயரில்  குழந்தைகள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை  வளர்க்கும் வகையில் இந்தப் பூங்கா உரு வாக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணொளிக் காட்சி  மூலம் பூங்காவைத் திறந்து வைத்தார். பூங்காவில் ஒரு மினி கோளரங்கம், அறி வியல் கண்காட்சி கூடம், உட்புற மற்றும் வெளிப்  புற அரங்குகள் மற்றும் மாணவர்கள் மற்றும் அறி வியல் ஆர்வலர்கள் பல்வேறு அறிவியல் அம்  சங்களைப் பற்றிய நடைமுறை அனுபவத்தைப் பெற உதவும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு கல்வி மையம் ஆகியவை உள்ளன. இந்தப் பூங்கா இன்னும் மக்களின் பயன்  பாட்டிற்கு திறக்கப்படவில்லை என அப்பகு தியை சேர்ந்தவர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தினர். இதை விரைவில் திறப்ப தன் மூலம், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருபவர்கள் மட்டுமல்லாது, மாநிலத்தின் பல்வேறு இடங்க ளிலிருந்து வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அறிவியல் பூங்காவை பார்த்துச் செல்வதற்கு உதவும்  குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான நுழைவு மற்றும் பயனர் கட்டணங்களை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. 8 வயது முதல் 15 வய துக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.15.  15 வய துக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.25 நுழைவுக் கட்ட ணமாக வசூலிக்கப்பட உள்ளது. இந்தக் கட்ட ணம் பூங்காவில் உள்ள உபகரணங்களை பரா மரிக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மேயர் எம்.அன்பழகன்  கூறுகையில், மாநகராட்சி வளாகத்தில், குறிப் பாக நுழைவு வாயிலில் நிலுவையில் உள்ள சில சிறிய பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. பூங்காவின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான டெண்டர் குடிமை இறுதி செய்யப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் பணிகளை விரைவுபடுத்தி, இம்மாத இறுதிக்குள் பூங்கா பொதுமக்களின் பயன் பாட்டுக்கு திறந்து விடப்படும் என்றார்.