districts

img

தரங்கம்பாடி, பொறையார், சங்கரன்பந்தல், கொள்ளிடம் அரசு மருத்துவமனைகளில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் ஆய்வு

மயிலாடுதுறை, மார்ச் 7 - மயிலாடுதுறை மாவட்டம் தரங் கம்பாடி, சங்கரன்பந்தல், பொறை யார் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகா தார நிலையங்களில் மக்கள் நல்வா ழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மருத்து வமனைகளில் அனுமதிக்கப்பட் டுள்ள நோயாளிகளை சந்தித்து உடல்நிலை குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.  ஆய்வின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர்  ஜெ.ராதாகிருஷ்ணன், மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் எம். பன்னீர் செல்வம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்கு நர் மரு.செல்வவிநாயகம், மருத்து வம் (ம) ஊரக நலப்பணிகள் இயக்கு நர் மரு.குருநாதன், செம்பனார்கோ வில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி மற்றும் அரசு  உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷக்கடி மருந்துகள் இல்லை. இரவு நேரத்தில் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டு மென ஆய்வு மேற்கொண்ட அமைச்சரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஜமாத்தார்கள் கோரிக்கை மனு அளித்தனர். பொறையார் அரசு மருத்துவ மனையில் 24 மணி நேரமும் சிகிச்சையளிக்கும் வகையில் தரம்  உயர்த்தி நவீனப்படுத்த வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை மனு  அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆய்வுக்கு பின்னர் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையையும் அமைச்சர்  மா.சுப்ரமணியன் பார்வையிட்டார்.

சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் கொள் ளிடம் அருகே உள்ள எருக்கூர் கிராமத்தில் மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை சார்பாக நடை பெற்று வரும் மக்களை தேடி மருத்து வம் திட்டத்தை மக்கள் மற்றும் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு பயனாளி களுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார். எருக்கூரில் முதியவர் ஒருவருக்கு அளிக்கப்பட்டு வரும்  முடநீக்கு சிகிச்சையை அமைச்சர்  பார்வையிட்டு மருந்து பெட்டகங் களை வழங்கினார்.