தரங்கம்பாடி, ஜூலை 12- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேர மருத்துவமனை யாக தரம் உயர்த்தி கூடுதல் மருத்து வர்களை நியமனம் செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். சங்கரன்பந்தலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் செய ல்பட்டு வருகிறது. சங்கரன்பந்தல், இலு ப்பூர், புத்தகரம், நல்லாடை, பனங்குடி, எர வாஞ்சேரி, விசலூர், பூதனூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தையே நம்பி யுள்ள சூழலில் போதுமான மருத்துவர்க ளின்றியும், இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட அடிப்படையான முதற்கட்ட மருத்துவ சேவைகள் கூட செய்வதற்கு வசதி யின்றி இம்மருத்துவமனை இயங்கி வரு கிறது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு துவங்கிய பணி கள் மிகவும் தாமதமாக முடிவடைந்த நிலை யில், இதுவரை அக்கட்டிடம் திறக்கப்படா மலிருக்கிறது. மேலும் இங்கு பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர் நோயாளிகளிடம் மிகவும் கடினமாக நடந்துக்கொண்டு மருத்து வம் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவ தோடு, கூடுதல் மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.