districts

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை

நீடாமங்கலம், ஏப்.9 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நீடாமங்கலம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய தலைவர் ஏ.அருள் குமார் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பி.விஜய், ஒன்றிய செயலாளர் டி.பி.கிஷோர் குமார், ஒன்றிய துணைச் செய லாளர் எஸ். ராஜா மற்றும்  ஒன்றியக்குழு  உறுப்பினர் கே.சாந்தமூர்த்தி, சி.குமார் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எங்கே எனது வேலை என்ற முழக்கத்தோடு நடைபெறுகிற சைக்கிள் பிரச் சாரத்தையொட்டி, நீடா மங்கலம் முழுவதும் சுவர் விளம்பரம் செய்வது என வும், பிரச்சார குழுவை சிறப் பாக வரவேற்பது எனவும், நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி ஏப்ரல் 20 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.