மயிலாடுதுறை, ஏப்.27 - சங்கரன்பந்தலில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலவும் நிர்வாக சீர்க்கேட்டை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தல் ஆரம்ப சுகாதார நிலை யத்தை நம்பி சுற்றியுள்ள கிராமங்களான எரவாஞ்சேரி, உத்திரங்குடி, விசலூர், முனி வேலங்குடி, ஓலக்குடி, திருவிடைக்கழி, சேந்த மங்கலம், பெருங்குடி, ஹரிஹரன்கூடல், பூதனூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் உள்ள னர். இந்நிலையில், சாதாரண முதலுதவி சிகிச்சையளிக்க கூட இந்த மருத்துவமனை யில் பணியாற்றும் மருத்துவர் மிகுந்த அலட்சி யம் காட்டுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலி யோடு வந்தும்கூட பரிசோதித்து சிகிச்சை யளிக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்து மயிலாடுதுறைக்கு அழைத்துச் செல்லுங்கள் என அலட்சியமாக கூறியதாக வும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கிய மற்றும் பாம்பு போன்ற விஷப் பூச்சிகள் கடித்து ஆபத்தான நிலையில் வருப வர்களுக்கு முதலுதவியும் செய்யப்படு வதில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவமனையை தரம் உயர்த்தி இரவு நேரங்களில் சிகிச்சையளிக்க மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். மின்தடை ஏற்பட்டால் இருண்டுக் கிடக்கும் மருத்துவமனைக்கு, இன்வெட்டர் வசதியை ஏற்படுத்த வேண்டும். வட்டார மருத்துவ அலு வலர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா ளர் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். இதனி டையே ஞாயிறன்று உத்திரங்குடி ஊராட்சி யில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முறையாக பணியாற்றாத மருத்துவரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.