districts

img

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை தடுப்புச் சுவர் கடலரிப்பால் சேதம்

மயிலாடுதுறை, டிச.18 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடியில் தொடரும் கடல் சீற்றம் காரண மாக வரலாற்றுச் சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டையின் தடுப்புச் சுவரின் ஒரு  பகுதி சேதமடைந்துள்ளது. கோட்டை யை பாதுகாக்கும் விதமாக பரா மரிப்புப் பணிகளை துரிதமாகவும், தர மாகவும் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி  காரணமாக மயிலாடுதுறை மாவட்டம்  முழுவதும் இரண்டு நாட்களாக குளிருடன், தொடர்ந்து மேக மூட்ட மாகவே காணப்படுகிறது. பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் ஃபெஞ்சல் புயலின்போது இருந்ததை விட தற்போது கடல் சீற்றம் அதிகமாக உள்ள தாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பல்வேறு வரலாற்று அம்சங்கள் கொண்ட தரங்கம்பாடிக்கு நாள்தோ றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆசிய வளர்ச்சி  வங்கியின் ரூ.4 கோடியே 83 லட்சம்  நிதி உதவியுடன் தமிழக சுற்றுலாத் துறை மூலம், கடந்த 2105 ஆம் ஆண்டு  இக்கோட்டையை பழமை மாறாமல்  புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. அப்போது கோட்டையை பாது காக்கும் வகையில், கோட்டையின் மதில் சுவரிலிருந்து ஏழு அடிக்கு அப்பால், நான்கரை அடி உயரத்துக்கு கோட்டையைச் சுற்றிலும் தடுப்புச் சுவர்  எழுப்பப்பட்டு, அதன்மேல் கம்பி வலைகள் அமைக்கப்பட்டன. அண்மைக் காலமாக இந்த தடுப்புச் சுவர் மீது அவ்வப்போது அலைகள்  வந்து மோதுவதாலும், கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதாலும், தடுப்புச் சுவரின் ஒரு பகுதியில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இது தொடர்ந்தால், கோட்டையின் மதில்  சுவர் பாதிக்கப்படும் நிலை உருவா கும் என அப்பகுதி மக்கள் தெரி விக்கின்றனர். கோட்டையை சுற்றி தடுப்புச் சுவர்  அமைக்கப்பட்ட போதே, ‘இது மிக கன மான, ஆழமான அளவிலான அஸ்தி வாரத்துடன் அமைக்கப்படவில்லை. இது எந்த வகையிலும் கடல் அரிப்பி லிருந்து கோட்டையை பாதுகாக்காது. ஆகவே கோட்டையை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் வகையிலும் கடற் கரையில் தூண்டில் வளைவு கருங்கல் குவியல் அமைக்கப்பட வேண்டும்’ என  பலரும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.