திருவாரூர், டிச.18 - பெண்ணுரிமை போராளி தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் கொடியேற்றப்பட்டு-வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சிபிஎம் திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் நகரச் செயலாளர் வி.சுதா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பா.கோமதி தோழர் பாப்பா உமாநாத் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சிஐடியு மாவட்ட பொருளாளர் இரா.மாலதி, கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.ஆர்.எஸ். சுந்தரய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.திரிபுரா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பா.கோமதி, ஒன்றியத் தலைவர் ஆர்.விக்டோரியா, கட்சியின் மூத்த தோழர் என்.இடும்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்சியின் குடவாசல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் டி.ஜி.தமிழ்செல்வி, ஒன்றியச் செயலாளர் கே.ஜெகதீஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். தோழர் பாப்பா உமாநாத் படத்திற்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். அமைப்பின் மூத்த தோழர் ராஜாத்தி, அமைப்பின் வெண்கொடியை ஏற்றினார். இதில் குடவாசல் ஒன்றியச் செயலாளர் டி.லெனின், நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வலங்கைமான் வலங்கைமான் ஒன்றியத்தில் 5 மையங்களில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. ராமப்பா தோட்டத்தில் ஒன்றியத் தலைவர் சத்தியபாமா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.சுமதி தோழர் பாப்பா உமாநாத் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சாரநத்தத்தில் ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரோதயம் தலைமையிலும், கொக்கலாடியில் ஒன்றிய துணைச் செயலாளர் ரேவதி தலைமையிலும், வேடம்பூரில் கோமதி தலைமையிலும், பூந்தோட்டத்தில் இ.மைதிலி தலைமையிலும் நினைவு தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.இராதா, வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் டி.சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.