districts

img

வீடுகளைச் சுற்றி மழைநீர் தேக்கம்: புதுவாக்காடு மக்கள் கடும் அவதி

அறந்தாங்கி, டிச.18 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோ வில் தாலுகா தொண்டை மானேந்தல் ஊராட்சிக் குட்பட்ட புதுவாக்காடு கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தொடர்ந்து பெய்த மழையால் இப்பகு தியில் உள்ள நர்சிங் வடி கால் ஷட்டரை அடைக்கா மல், அதிலிருந்து அதிகளவி லான நீர் இப்பகுதியில் புகுந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.  இதுகுறித்து அரசு அதி காரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்ற னர். குறிப்பாக, இப்பகுதி யில் படிக்கக் கூடிய மாண வர்கள் அரையாண்டு தேர்வு எழுத முடியாமலும், முதியோர்கள் மருத்துவ மனைக்கு செல்ல முடியாம லும் தவித்து வருவதாக வேத னையுடன் தெரிவித்தனர்.