திருச்சிராப்பள்ளி, டிச.18 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர் சீத்தா கொடுத்த மனுவில், “திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 55 ஆவது வார்டு பொன்னகர் 2 ஆவது மெயின் ரோடு முதல் ஏழாவது குறுக்குத் தெரு வரை மழை நீர் வடிகால் இல்லாததால் இங்கு வசிக்கும் மக்களுக்கு மிகவும் அவதிப்படுகின்றனர். சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்குவ தால் இங்கு இருக்கின்ற மக்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடன டியாக மழைநீர் வடிகாலை தூர்வாரி தர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்று கிளைச் செயலாளர் முருகன் கொடுத்த மனுவில், “தென்னூர், அண்ணாநகர், வ.உ.சி சாலை, பார்க் வியூ ஸ்ட்ரீட்ல் உள்ள மழைநீர் வடிகால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் இந்த பகுதி முழுவதும் மழை நீர் வடிகால் வாய்க்காலில் தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மழைநீர் வடிகாலை தூர்வார நட வடிக்கை எடுக்க வேண்டும்”. கிளைச் செயலாளர் வேதநாயகம் கொடுத்த மனுவில், “திருச்சி மாநகராட்சி 55 ஆவது வார்டு பொன்னகர் 1 ஆவது மெயின் ரோட்டில் உள்ள இரண்டாவது, மூன்றாவது குறுக்கு தெருவில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரா மல் உள்ளது. இதனால் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையின் இரு புறமும் பல மாதங்களாக சுத்தம் செய்யாத தால் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த சாக்கடையை தூர் வாருவதுடன், குப்பை களை உடனடியாக அகற்ற வேண்டும். பொன்னகர் இரண்டாவது மெயின் ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பழுதடைந் துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்” என கூறியிருந்தனர். மனுவை அதிகாரியிடம் வழங்கும் போது பகுதிக்குழு உறுப்பினர், ஆஷிக் அலி, கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணி, விஜய், அக்பர் ஆகியோர் உடனிருந்தனர்.