மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி தரக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டத் தலைவர் ஏ.சிக்கந்தர், வாய்பேசாத, காதுகேளாத கிளை அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.முருகானந்தம், மாதர் சங்க ஒன்றிய தலைவர் எம்.சுமதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.