districts

திருச்சி முக்கிய செய்திகள்

கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டம்

பாபநாசம், டிச.24 - பாபநாசத்தை அடுத்த  கபிஸ்தலம் அருகே கரும்பு விவசாயிகள் 787  ஆவது நாளாக கருப்புக் கொடி ஏந்தி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு  விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலு வைத் தொகையை உடனடியாக வழங்கக்  கோரியும், சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி யும், 787 நாட்களாக விவ சாயிகள் போராடி வரு கின்றனர்.  இந்நிலையில் வெள்ளியன்று கரும்பு  விவசாயிகள், கருப்பு  கொடியுடன் கோரிக்கை களை வலியுறுத்தி ஆலை நிர்வாகம் மற்றும்  ஒன்றிய, மாநில அரசு களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய வாறு, ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். உடனடியாக கபிஸ் தலம் காவல்துறையினர் விவசாயிகளை அங்கி ருந்து அப்புறப்படுத்தி னர்.

ஆரூரான் சர்க்கரை ஆலையில் அரவைப் பணிகள் தொடக்கம்

பாபநாசம்,  ஜன.24 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே திரு மண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான அரவைப் பணி தொடங்கியது.  இதில் ஆலையின் நிர்வாக இயக்குநர் நடேசன், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சண்முகம் உள்ளிட்டோர் கன்வேயர் பெல்ட்டில் கரும்புகளை இட்டு அர வைப் பணியை தொடங்கி  வைத்தனர். கடந்த ஆண்டு இந்த சர்க்கரை ஆலையில் 36,000 டன் கரும்பு அரைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு லட்சம் டன்  கரும்பு அரைக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநர் நடேசன் தெரிவித்தார்.

ரூ.1,000 திட்டத்தை விமர்சித்த கட்சியும் பின்பற்றுகிறது  அமைச்சர் கோவி. செழியன் பேச்சு

தஞ்சாவூர், ஜன.24 - பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை விமர்சனம் செய்த அகில இந்தியக் கட்சியும் தற்போது அதை பின்பற்றி ரூ.2,500 தருவதாகக் கூறி வருகிறது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.  தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை குறை கூறினர். அதை விமர்சனம் செய்த அகில இந்தியக் கட்சியே தற்போது மாதம் ரூ. 2,500 தருவதாகச் சொல்லி, எனக்கு வாக்களிக்குமாறு கூறுகிறது.  ஒரு மாநிலக் கட்சியைப் பார்த்துவிட்டு, அகில இந்திய கட்சி பாடம் கற்றுக் கொண்ட வரலாறு திமுகவுக்கும், அதன் தலைவருக்கும் உண்டு. அனைத்து வகைகளிலும் நாம் முன்னுதாரணமாக இருக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்கிறோம். அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறோம்.  விடுபட்டு போன ஆயிரம் ரூபாய் திட்டத்தை விரைவில் வழங்குவேன் என துணை முதல்வர் கூறியபடி, அத்திட்டமும் தொடர இருக்கிறது. எனவே, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்” அமைச்சர்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை

அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார் திருச்சிராப்பள்ளி, ஜன.24 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் உன்னத திட்டத்தை அறி வித்ததன் அடிப்படையில் திருச்சி மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதி தாக அமைக்கப்பட்டு 7.5.2022 முதல்  பொதுமக்களுக்கு மருத்துவ சேவை கள் வழங்கப்பட்டு வருகிறது. நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர். மருத்துவமனை பணியா ளர் என நான்கு பேர் கொண்ட குழுவினர்  பணிபுரிவர். காலை, 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை  4 மணி முதல் இரவு 8 மணி வரை  இம்மையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இங்கு புறநோயாளிகள் சிகிச்சை, தொற்றா நோய் (உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் புற்று நோய்)  ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணி கள் மற்றும் குழந்தைகள் சிசு பரா மரிப்பு, இளம் சிறார் மற்றும் வளரி ளம் பருவ நலசேவை, குடும்ப கட்டுப் பாடு, தொற்றும் நோய் தடுப்பு, மன நலம் சார்ந்த நோய் கண்டறிதல் மற்றும்  சிகிச்சை, முதியோருக்கான மருத்துவ  சேவை, விபத்து உள்ளிட்ட சேவைகள்  அளிக்கப்படுகின்றன. 37 பேர் தேர்வு இச்சேவையை சிறந்த முறையில்  வழங்கிடும் வகையில், திருச்சிராப் பள்ளி மாநகராட்சியின் நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் காலியாக உள்ள  4 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலி யர்கள் மற்றும் 7 மருத்துவப் பணியா ளர்கள் ஆகிய இடங்களுக்கும், அரசு கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரி யும் வகையில் ஒரு லேப் டெக்னிசியன், ஒரு அவசர சிகிச்சை உதவியாளர், 2  மருத்துவமனை உதவியாளர்கள், மேலும் இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் வகையில் 3 நுண் கதிர் வீச்சாளர், 3 மருத்துவமனை பணியாளர் மற்றும் 1 பாதுகாவலர் என மாவட்ட சுகாதார சங்கம் மூலம் 37 பேர் தேர்வாகினர். இவர்களுக்கு வெள்ளியன்று மாநகராட்சி அலுவலகத்தில், மாவட்ட  ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பணி உத்தரவினை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவ பாதம், மாநகர நல அலுவலர் விஜய சந்திரன், துணை ஆணையர் பாலு,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சிகளுடன் ஊராட்சி கிராமங்களை  இணைக்கும் திட்டத்தை கைவிடுக! சிபிஎம் திருவாரூர் மாவட்டக் குழு வலியுறுத்தல்

திருவாரூர், ஜன.24 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகள் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், மன்னார்குடி ஆகிய நகராட்சிகள் ஆகும்.  இதில் திருவாரூர் மற்றும் மன்னார் குடி நகராட்சிகளில்  ஊராட்சி கிராமங் களை இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் டி.முருகையன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது:  திருவாரூர் நகராட்சியுடன் வேலங் குடி, அலிவலம், கீழகாவாதுகுடி, தண்டலை, பழவனகுடி, புலிவலம், பெருங்குடி, இலவங்கார்குடி, தேவர் கண்டநல்லூர், காட்டூர், அம்மை யப்பன் மற்றும் பெருந்தரக்குடி ஆகிய 12 ஊராட்சிகள் இணைக்கப்படு கின்றன. இதேபோல் மன்னார்குடி நகராட்சி யுடன் அஷேசம், மேலவாசல், நெடு வாக்கோட்டை, கர்னாவூர், இராமா புரம் மற்றும் மூவாநல்லூர் ஆகிய ஊராட்சிகள் சேர்க்கப்படுகின்றன. இதில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள பெருந்தரக்குடி ஊராட்சி கிராம மக்கள், தங்களின் கிராமத்தை திரு வாரூர் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தொடர் போராட்டம் நடத்தி  வருகின்றனர். இதே போல் மன்னார்குடி நக ராட்சியில் இணைக்கவுள்ள வாஞ்சி யூர் கிராமம் மற்றும் மூவாநல்லூர், உள்ளிட்ட ஊராட்சிகளை நகராட்சி யுடன் இணைக்கக் கூடாது என அந்தப் பகுதி கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கிராமப்புற மக்களின் பெரும் ஆதரமாக உள்ள நூறு நாள் வேலை பறிபோகிவிடும். வரி உயர்வு தாங்க முடியாத அளவுக்கு ஏற்றப்படும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிராம மக்கள் நகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் துள்ளனர். எனவே கிராமங்களை நகராட்சி யுடன் இணைக்கும் முயற்சியை கை விட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் குடியரசு தினத்தன்று நடக்கும்  கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்து, தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த  16 பள்ளி குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு

கும்பகோணம், ஜன.24 - கும்பகோணம் மருத்துவமனையில் ஒரே கிராமத்தைச்  சேர்ந்த 15 சிறுவர்- சிறுமிகள் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லூர் கிராமம் அம்பலக்கார தெருவைச் சேர்ந்த  16 சிறுவர்-சிறுமியர்கள், நீலத்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவ-மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் களை அருகிலுள்ள கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு சிகிச்சைக்காக பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு நோய் குணமாகாததால் அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். அங்கு, அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில் மேலும் சிலருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌. அதே பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்பவருக்கு மஞ்சள்காமாலை நோய்  கண்டறியப்பட்டதால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி யில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகளை ஆய்வுக் காக அனுப்பி வைத்துள்ளதாகவும், ஆய்வு முடிவு வந்த  பிறகுதான் முழு விவரங்கள் தெரிய வரும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளை சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், செயற்குழு உறுப்பினர் க.அருளரசன், நகரச் செயலாளர்  கா.செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் என்.கணேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் சி.நாகராஜன், வி.தொ.ச ஒன்றியத் தலைவர் ஆர்.நாகமுத்து ஆகியோர்  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: மமக தலைவர் ஜவாஹிருல்லா தகவல்

பாபநாசம், ஜன.25- ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்ப தாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவா ஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் அனைத்து கட்சிகளுக்கும், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த  தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக் கிறது. சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்திற்கு அனுமதி அளிக்காமல், காலம் தாழ்த்துவது, சட்டமன்ற கூட்டத் தொடரில், ஆளுநர் உரையை விட்டுவிட்டு வாசிப்பது, சட்டமன்றத்தின் மரபைப் பேணா மல் வெளிநடப்பு செய்வது, பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதென்று தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு விரோதமாக நடந்து கொண்டிருக்கும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை, மனிதநேய மக்கள்  கட்சி புறக்கணிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

நெகிழி கழிவுகளை சேகரிக்கும் இயக்கம்

மயிலாடுதுறை, ஜன.24 - பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை ஒழிப்பதற்காகவும், மக்களிடையே நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரி யத்தின் நிதியுதவியுடன் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் 4 ஆவது சனிக்கிழ மைகளில் நெகிழிப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  மற்றும் நெகிழிப் பொருள் சேகரிப்பு இயக்கங்களை நடத்திட தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை மாவட்டத் தில்  ஜன.25 அன்று அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும்  கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் தேங்கியுள்ள நெகிழி கழிவுகளை சேகரிக்கும் இயக்கம் சிறப்பாக நடைபெறும் எனவும், இப்பேரியக்கத்தில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு நெகிழியை ஒழிப்பதில் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானிகளுக்கு உதவும் வகையில் நவீன வழிகாட்டு மையம் பயன்பாட்டுக்கு வந்தது

திருச்சிராப்பள்ளி, ஜன.24 - பன்னாட்டு விமான நிலையங்களில், விமானிகளுக்கு உதவும் வகையில், நவீன தொழில்நுட்ப மேம்பாட்டுடன்கூடிய புதிய  தொலைத் தொடர்பு மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே இருந்த மையத்தில், புதிய தொழில்நுட்ப வசதி இல்லாததால் அதன் செயல்பாட்டை மேம்படுத்த முடிவு செய்யப் பட்டது.  அந்த வகையில், ரூ.7.61 கோடியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வான்  வழிகாட்டு மற்றும் தொலைதூரம் கண்டறி யும் மையம் அமைக்கப்பட்டு, வியாழக் கிழமை முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்தை திறந்து வைத்த  விமான நிலைய இயக்குநர் (பொ) கோபால கிருஷ்ணன் கூறுகையில், “திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்த மையத்தின் மூலம் விமா னங்கள் குறிப்பிட்ட இலக்கை (விமான நிலை யத்தை) சென்றடைய விமானிகளுக்கு உத வும்.  உதாரணமாக, சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட விமானம், அது புறப்பட்ட நிலையத்திலிருந்து செல்ல வேண்டிய நிலையத்தை கணினி திரையில் விமானிகள் தேர்வு செய்தால், அந்த விமான  நிலையம் மற்றும் பயண நேரம், தொலைவு, விமான நிலையம் அமைந்துள்ள இருப்பி டம் (லொக்கேஷன்) அனைத்தும் தடையற்ற  வகையில் தெளிவாக விமானிகளுக்கு காண்பிக்கும் வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளது.  இதனால் விமானங்கள் தாமதமின்றி நேரடியாக திருச்சி விமான நிலையம் வந்தி றங்கவும், இந்த விவரங்களை விமானம் புறப்பட்டது முதல் வந்து சேரும் வரையில் தெளிவாக காண முடியும். இதனால் தேவையின்றி விமானங்கள் சுற்றி வர வேண்டியது இருக்காது. விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்தடைவதால், அது பயணிகளுக்கு மிகவும் சௌகரியமாக அமையும். திருச்சி பன்னாட்டு விமான நிலையம், அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான மற்றும் தடையற்ற அனுப வத்தை உறுதி செய்யும் அதே வேளையில், விமானத் துறையின் வளர்ந்து வரும் தேவை களைப் பூர்த்தி செய்யவும், உள்கட்ட மைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும்” என்றார்.