districts

img

யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெறக் கோரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சாவூர், ஜன.29 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒட்டங் காடு, கல்லூரணிக்காடு, திருச்சிற்றம் பலம், செருவாவிடுதி, இடையாத்தி, வெட்டுவாக்கோட்டை ஆகிய பகுதி களில், ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதன் கிழமை நடந்தது. இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டார். கடந்த ஜன.6 அன்று வெளியான யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளை, ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, பேரா வூரணி அருகே ஒட்டங்காடு கடைவீதி பகுதியில், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கை அட்டைகளை ஏந்தி போராட் டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, அவ்வழியாக வந்த அமைச்சர் கோவி.செழியன், “யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகளை, ஒன்றிய அரசு  திரும்பப் பெறும் வரை தமிழக அரசு  போராடும். மாணவர்கள் யு.ஜி.சி., செய லருக்கு கடிதம் அனுப்ப வேண்டும். மாணவர்களின் போராட்டங்களுக்கு அரசு துணையாக இருக்கும்” என மாண வர்களிடம் தெரிவித்தார். இதேபோல் திருச்சிற்றம்பலம் கடை வீதியிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அமைச்சர் கோவி.செழியன் காரில் இருந்து இறங்கி மாண வர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதில், பேராவூரணி எம்.எல்.ஏ., நா.அசோக்குமார், பட்டுக் கோட்டை எம்.எல்.ஏ., கா.அண்ணா துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.