districts

img

ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தேனி, பிப்.25- தேனியில் மும்மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்வித் துறைக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் தேனியில் திமுக மாணவரணி மற்றும் கூட்ட மைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்  டம் நடைபெற்றது. திமுக தேனி வடக்கு மாவட்ட  மாணவரணி சார்பில் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தேனி - மதுரை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்த தங்க தமிழ்செல்வன் எம்.பி.  தலைமை யில் திமுகவினர் மற்றும் மாணவர் கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்தியன் வங்கி முன்பாக கண்  டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அவைத் தலைவர் செல்லப்பாண்டி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சர வணக்குமார், முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், தேனி நகர் செயலா ளர் நாராயணபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  திண்டுக்கல் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக  மாணவர் அமைப்பின் அமைப்பா ளர் பிரபாகரன் தலைமை வகித்  தார். மாவட்ட துணை அமைப்பா ளர் சூசை ராபர்ட் வரவேற்புரை ஆற்றினார். முத்துக்குமார், பாஸ்க ரன், முத்துலட்சுமி ஆகியோர் முன்  னிலை வகித்தனர். இந்திய மாணவர் சங்க மாவட் டத் தலைவர் எம்.இ.நிருபன், மாவட்ட துணைத் தலைவர் எஸ். துர்காதேவி, அகில இந்திய மாண வர் பெருமன்ற மாநிலச் செயலா ளர் தினேஷ், மாவட்டச் செயலா ளர் விஷ்வா, மாணவர் காங்கிரஸ்  மாவட்ட அமைப்பாளர் ஜீவானந் தம், மதிமுக மாணவர் அணி மாவட்டச் செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசி னர்.   மாநகர மாணவரணி செயலா ளர் மதுசூதனன் நன்றி கூறினார்.