districts

img

பேராவூரணி அரசு கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

தஞ்சாவூர், பிப்.25-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கு  நடைபெற்றது.   கணினி அறிவியல் துறை சார்பாக “செயற்கை நுண்ணறிவு-கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்த ரங்கிற்கு கல்லூரி முதல்வர் இரா.திருமலைச் சாமி தலைமை வகித்தார். கணினி அறிவியல்  துறைத்தலைவர் (பொ) பேராசிரியர் சி. இராணி முன்னிலை வகித்தார். செயற்கை நுண்ணறிவு-கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் பேராசிரியர் முனை வர் வேத. கரம்சந்த் காந்தி பேசினார். கருத்த ரங்கில், செயற்கை நுண்ணறிவு உருவான வரலாறு தொடங்கி, இன்றைய கணினி உலகில் கொடி கட்டிப் பறக்கும் ஜெமினி சாட்ர்ஜிபிடி போன்றவை குறித்து பேசி னார். இதில், கணினி அறிவியல் துறை மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக  பேராசிரியர் சோ.ஜமுனா வரவேற்றார். பேரா சிரியர் அ. ராஜேஷ் நன்றி கூறினார்.