districts

img

திருச்சிராப்பள்ளியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்புப் பணியை விரைந்து முடிக்கத் திட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 15- திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, நக ரின் ஐந்து மண்டலங்களிலும் மக்களின்  போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும்,  வருவாய் ஈர்க்கவும், நகர் விற்பனைக் குழு வை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக  சாலையோர வியாபாரிகளைக் கணக்கெடுக்கும் பணியை மார்ச் இறு திக்குள் கணக்கெடுப்பு முடிக்க திட்டமி டப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சென்ஸ் இமேஜ்  டெக்னாலஜிஸ் என்ற ஏஜென்சி மூலம் தெரு வோர விற்பனைக் குழுவை அமைப்பதற் காக ஐந்து மண்டலங்களிலும் புதிய கணக்  கெடுப்பு நடந்து வருகிறது. இது முடிந்த வுடன் சாலையோர வியாபாரிகளின் பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத் தப்படும். அதிகாரிகளின் கூற்றுப்படி, நகரில் 3,700க்கும் மேற்பட்ட சாலையோர வியா பாரிகள் உள்ளனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாக இருப்பதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.  கணக்கெடுப்பு முடிந்ததும் தெருவோர வியாபாரிகள் குறித்த அதிகாரப்பூர்வ தக வல்கள் வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.  சாலையோர வியாபாரிகள் வார்டு வாரி யாக கணக்கெடுக்கப்படுவர். ஒவ்வொரு  வியாபாரிகளும் நகர் விற்பனைக் குழு  மூலம் பதிவு செய்யப்பட்டு அடையாள  அட்டை வழங்கப்படும். விற்பனையாளர் களின் பெயர், நிரந்தர முகவரி, புகைப் படம், வணிகத்தின் தன்மை மற்றும் அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்கள் உள்ளிட்ட  விவரங்களை ஜிபிஎஸ்-மூலம் பதிவு செய்  யப்படும். இது ஒரே நபர் கணக்கெடுப் பிற்குள் வருவதை முறைப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. தற்போது எடுக்கப்படும் கணக்கெடுப்பு விரிவானதாக இருக்கும். எந்த ஒரு வியாபாரியும் இது விடுபட மாட்டார் என என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். சாலையோர வியாபாரிகள் அனு மதிக்கப்படும் இடங்களில் கழிப்பறை உள்  ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப் படும். நிதி உதவி இதற்கென அமைக் கப்படும் குழுவால் ஏற்பாடு செய்யப்படும்.  அதே நேரத்தில் சாலையோர வியாபாரி களிடமிருந்து எந்த வருமானத்தையும் ஈட்ட வில்லை. குழு அமைக்கப்பட்டதும், பரிந்து ரைக்கப்பட்டபடி கட்டணம் வசூலிக்கப் படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.