மன்னார்குடி, ஜன.24 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் ராமாபுரம் ஊராட்சி வாஞ்சியூர் கிரா மத்தை, மன்னார்குடி நகராட்சியுடன் இணைப் பதை கண்டித்து மாபெரும் சாலை மறியல் போராட்டம் மன்னார்குடி- திருவாரூர் சாலை யில் வாஞ்சியூர் கிராம முக்கத்தில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலை மையில் நடைபெற்ற இம்மறியலில், கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் உரையாற்றினார். தகவலறிந்து மன்னார்குடி காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப், வருவாய் வட்டாட்சியர் நா.கார்த்தி, கிராம நிர்வாக அலு வலர் கே.சாந்தி, நகராட்சி மேலாளர் மன்சூர் ஆகியோர் போராட்டக் களத்திற்கு வந்த னர். அப்போது வட்டாட்சியர் கார்த்தி பேசுகை யில், “போராட்ட கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்து அனுப்பப் படும்” என்றார். இப்போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ் மற்றும் 300 பெண்கள் உட்பட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். இவர்களில் கிளைச் செயலாளர் கவிய ரசன், இளங்கோ உள்பட 146 பேர் கைது செய்யப்பட்டனர்.