தஞ்சாவூர், செப்.10 - மயானக் கொட்டகை, சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும் என அதி காரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததால், ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம் செண்பகபுரம் ஊராட்சி, தென் கொண்டார இருப்புக் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில், சுடுகாட்டுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும். மயானக் கொட்டகை அமைத்து தர வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதியில் உட்பிரிவு சாலை, குடிநீர் குழாய், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரி செவ்வாயன்று மனுக் கொடுத்து, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத் தில் காத்திருப்பு போராட்டம் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், மாவட்ட துணைச் செயலாளர் கே.முனியாண்டி தலை மையில், மாநிலச் செயலாளர் ஆர். கலைச்செல்வி, தஞ்சை மாவட்டப் பொருளாளர் பி.சத்யநாதன், மாவட்ட துணைச் செயலாளர் களப்பிரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.பிரதீப் ராஜ்குமார், பி. மாணிக்கம், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பி னர் டி.மயில்வாகனன் மற்றும் கிராம மக்கள் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்று மனு கொடுத்தனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், ஒன்றியப் பெருந்தலைவர் கலைச் செல்வம், காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கிராம மக்கள் மற்றும் போராட்டக் குழுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பொதுமக்களின் கோரிக்கை களை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப்பூர்வ மாக உறுதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படை யில், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.