districts

img

எல்.ஐ.சி காப்பீடு தொகைக்கான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

அரியலூர், டிச.20 - எல்.ஐ.சி. காப்பீடு தொகைக்கான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய எல்.ஐ.சி முகவர்கள் சங்க  அமைப்புத் தின விழாவில் வலியுறுத்தப் பட்டது. அகில இந்திய எல்.ஐ.சி முகவர்கள் சங்க அமைப்பு தினத்தையொட்டி, அரியலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு வெள்ளி யன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா சிறப்புரை யாற்றினார். மேலும் எல்.ஐ.சி. காப்பீடு தொகைக் கான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய  வேண்டும். குறைந்தபட்ச காப்பு தொகையை முன்பு போல் ரூ.1 லட்சமாக குறைக்க வேண்டும். எல்.ஐ.சி காப்பீட்டுக்கான போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். முகவர்களுக்கான கமிசன் சீரமைப்பை ரத்து செய்து பழைய நடை முறையை செயல்படுத்த வேண்டும். கி.பேக்  விதிமுறைகளை முற்றிலுமாக நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் கிளைச் செயலர் என்.நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் சங்கக் கொடியை ஏற்றி வைத்து பேசி னார். சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரை சாமி, லிகாய் கோட்ட துணைச் செயலர் கே. கிருஷ்ணன், துணைத் தலைவர் டி.மாலதி, கிளை பொருளாளர் எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.