மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம், ஈச்சங்குடி ஊராட்சிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 4 மின்மாற்றிகள் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ரூ.32 லட்சத்தில் நான்கு புதிய மின்மாற்றியை பொது மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர்கள் அப்துல் மாலிக், அமிர்த விஜயகுமார் மற்றும் மின்வாரியத்தினர் கலந்து கொண்டனர்.